How to clean ears at home naturally: ஆண்டுதோறும் மார் மாதம் 3 ஆம் நாள் உலக செவித்திறன் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் காது கேளாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் காது மற்றும் செவித்திறன் பராமரிப்பை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலகளாவிய தினமானது பல்வேறு முக்கிய காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அவை செவித்திறன் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகும்.
ஒவ்வொரு ஆண்டும், உலக செவித்திறன் தினம் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு செவித்திறன் ஆரோக்கியம் தொடர்பான சவால்கள், அணுகக்கூடிய செவித்திறன் பராமரிப்பு சேவைகளின் அவசியம் போன்றவற்றைக் குறித்து கல்வி கற்பிப்பதற்காக கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இந்த தினத்தில், செவித்திறன் விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம், செவித்திறன் குறைபாடு தொடர்பான பிரச்சனைகளைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு செவித்திறன் இழப்பைத் தடுப்பதற்கான குறிப்புகள் இங்கே..
உலக செவித்திறன் தினம் 2025 வரலாறு (World hearing day 2025 history)
உலக சுகாதார அமைப்பானது (WHO) முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு உலக செவித்திறன் தினத்தை அங்கீகரித்தது. அதற்கு முன்னதாக, இது சர்வதேச காது பராமரிப்பு தினம் என்று அழைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், அதிகாரப்பூர்வமாக WHO இந்த தினத்தை உலக செவித்திறன் தினமாக மறுபெயரிட்டது.
ஆண்டுதோறும், இந்த தினத்திற்கு ஒரு தனித்துவமான கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உருவாக்கப்படுகிறது. கூடுதலாக, WHO உலகளாவிய முன்முயற்சிகளை நடத்தி, உலகளவில் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு செவிப்புலன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை வழங்குகிறது.
உலக செவித்திறன் தினத்தின் முக்கியத்துவம் (World hearing day 2025 significance)
இந்த தினத்தில் உலகளவில் காது பராமரிப்பை ஊக்குவிப்பதாலும், காது கேளாமை குறித்த விழிப்புணர்வைத் தருவதாலும் உலக செவித்திறன் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மில்லியன் கணக்கான மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் சரியான சுகாதார வசதிகள் தெரிவதில்லை.
உலக செவித்திறன் தினம் ஆரம்பகால கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை அறிவதை வலியுறுத்துகிறது. உலக செவித்திறன் தினத்தில் விழிப்புணர்வை பரப்புவதன் மூலமும், நடவடிக்கையை வளர்ப்பதன் மூலமும், காது கேளாமையின் தாக்கத்தைக் குறைக்கலாம். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Headphone Users: இயர்போன் பயனர்களே உஷார்! அதிக சத்ததுடன் மியூசிக் கேட்டால்..
உலக செவித்திறன் தினம் 2025 தீம் (World hearing day 2025 Theme)
இந்த 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளானது, “உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்பதன் மூலம் மேம்பட்ட செவித்திறனை நோக்கிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, நகரத்தைச் சார்ந்த ENT நிபுணர்களும் நீண்டகால ஒலி மாசுபாடு மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் காது அதிர்ச்சியைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது”.
உலக சுகாதார அமைப்பானது, உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும், அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக பங்கேற்பதிலும் கேட்கும் ஆரோக்கியத்தின் முக்கிய பங்கை இந்த தினம் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அதிக சத்தத்திலிருந்து காதுகளைப் பாத்காப்பது, வழக்கமான கேட்கும் பரிசோதனைகளை மேற்கொள்வது, தேவைப்படும்போது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, மற்றும் கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு மக்களை ஊக்குவிக்கிறது.
காதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி (How to keep ears clean and healthy)
பருத்தி துணி பயன்பாட்டைத் தவிர்ப்பது
காதுகளில் துணிகளைச் செருகுவது மெழுகை ஆழமாகத் தள்ளி அடைப்புகள் அல்லது சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே காதுகளுக்கு பருத்தி துணி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
காது மெழுகு தானாகவே அகற்றும்
காதில் உள்ள மெழுகானது இயற்கையாகவே காது கால்வாயிலிருந்து வெளியேறலாம். மேலும் இது மெழுகு அதிகம் சுத்தம் செய்வதைத் தவிர்க்கிறது.
காதுகளை உலர வைப்பது
காதுகளில் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு நீச்சல் அல்லது குளித்த பிறகு, காதுகளை மெதுவாக உலர வைக்க வேண்டும். மேலும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற தலையை சாய்த்து வைக்கலாம்.
கூர்மையான பொருள்களைத் தவிர்ப்பது
சிலர் காதுகளைச் சுத்தம் செய்வதற்கு சாவிகள், ஹேர்பின்கள் அல்லது வேறு கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவர். ஆனால், இது காதுகளில் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே காதுகளில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
காது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது
காதுகளில் உள்ள மெழுகை மென்மையாக்கி எளிதாக அகற்றுவதற்குத் தேவைப்பட்டால், காது சொட்டி மருந்துகளைப் பயன்படுத்தலாம். எனினும், இதைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: நீங்க இயர்போன் பயன்படுத்துறீங்களா? இந்த 5 விஷயத்தைப் பத்தி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!
Image Source: Freepik