இயற்கையாகவே மார்பக அளவை அதிகரிக்க நிபுணர் சொன்ன இந்த ஐந்து உணவுகளை சாப்பிடுங்க போதும்

How to increase breast size naturally: மார்பகங்களின் அளவை அதிகரிக்க பலரும் பல வழிகளை முயற்சிக்கின்றனர். எனினும், பெண்களுக்கு இயற்கையான முறையில் மார்பகங்களின் அளவை அதிகரிக்க உணவுமுறைகளும் உதவுகிறது. இதில் இயற்கையாகவே மார்பகங்களின் அளவை அதிகரிக்க மருத்துவர் பரிந்துரைத்த சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இயற்கையாகவே மார்பக அளவை அதிகரிக்க நிபுணர் சொன்ன இந்த ஐந்து உணவுகளை சாப்பிடுங்க போதும்

How to increase breast size naturally with food: பெண்கள் வயது அதிகரிக்கும் போது அவர்களுடைய உடல் உறுப்புகளில் மாற்றங்களைக் கவனிக்கலாம். அவ்வாறே, வயது அதிகரிப்பதால் சிறிய, தளர்வான தொய்வடைந்த மார்பகங்களின் பிரச்சனை பெண்களிடையே மிகவும் பொதுவானதாகும். எனினும், தற்போதைய காலத்தில் பெண்கள் தங்களின் இளம் வயதிலேயே சிறிய மற்றும் தளர்வான மார்பகங்களின் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனினும், இந்நிலையை எதிர்கொள்ள பலரும் உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

ஆனால், உங்களுக்குத் தெரியுமா? இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு சில ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இது மார்பகங்களை வடிவமைக்க உதவுவது மட்டுமல்லாமல் இயற்கையாகவே மார்பகங்களின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. சிறிய மற்றும் தளர்வான மார்பகங்கள் காரணமாக பெண்களிடையே தன்னம்பிக்கை குறைகிறது. இந்நிலையால் பல நேரங்களில் அவர்கள் பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தான் அவர்கள் பல்வேறு குறிப்புகள் மற்றும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: மசாஜ் செய்வதால் மார்பக அளவு அதிகரிக்குமா?

மார்பக அளவை அதிகரிக்க என்ன செய்வது?

நல்ல விஷயமாக, மார்பகங்களின் அளவை அதிகரிக்க அன்றாட உணவுமுறையில் சில உணவுகளைச் சேர்க்கலாம். மேலும் இவை மார்பகங்களை இறுக்கமாகவும் வடிவமாகவும் மாற்றுவதில் நன்மை பயக்கும். மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர் கரிமா கோயலின் கூற்றுப்படி, சிறிய மார்பகங்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனினும், சரியான உணவுமுறை மற்றும் சீரான உணவுமுறையின் உதவியுடன் இதை குணப்படுத்த முடியும். இப்போது மார்பக அளவை  அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதில் சிறிய மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து நிபுணர் கூறியதைக் காண்போம்.

மார்பக அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

சோயா பொருட்கள்

சோயா பால், சோயாபீன்ஸ் மற்றும் டோஃபு போன்ற சோயா மற்றும் சோயா பொருட்கள் புரதம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை தசைகளை வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் இவை ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படும் ஐசோஃப்ளேவோன்களிலும் நிறைந்துள்ளன. இவை மார்பக அளவை அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக அமைகிறது.

வெந்தய விதைகளை உட்கொள்வது

இந்த விதைகளில் நல்ல அளவிலான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது மார்பக விரிவாக்கத்திற்கு உதவுகிறது. ஏனெனில், வெந்தய விதைகள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால், இதன் ஊட்டச்சத்துக்கள் மார்பகத்தை எளிதில் சென்றடையும். மேலும், வெந்தய விதைகளை உட்கொள்வது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது அதை அன்றாட உணவில் சேர்க்கலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

பால் குடிப்பது

பாலில் வைட்டமின் பி, டி, புரதம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் மனித உடலில் உள்ளதைப் போன்ற ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், புரோலாக்டின் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்கள் உள்ளது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் கருவுறுதலை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breast Size: மார்பக அளவை இயற்கையாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்க!!

விதைகளை சாப்பிடுவது

விதைகளில் நல்ல அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது. மேலும் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளது. இதன் காரணமாக உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறவும், ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது. இதற்கு சூரியகாந்தி, ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

மெலிந்த இறைச்சியை உண்ணுவது

மெலிந்த இறைச்சியில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை மார்பக அளவை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அதை இறுக்கமாக்கி விடுகிறது.

கடல் உணவை உண்ணுவது

மீன் போன்ற கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நல்ல அளவிலான மாங்கனீசு உள்ளது. இதன் மூலம் இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். இவை மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Increase Breast Size: உடற்பயிற்சி செய்தால் உண்மையில் மார்பக அளவு அதிகரிக்குமா? உண்மை இங்கே!

Image Source: Freepik

Read Next

BATHING MISTAKES: பெண்களே குளிக்கும் போது மறந்து கூட இந்த தவறுகளை செய்யாதீங்க!

Disclaimer