Black Foods: இன்றைய விறுவிறுப்பான வாழ்க்கை முறையால் பலர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் குறிப்பாக ஒன்று உடல் பருமன். உடல் எடையை குறைக்க பலர் பல வழிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இதனால் பலருக்கும் பலன் கிடைப்பதில்லை.
மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பலர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். உடல் பருமன் ஏற்படுவதோடு உடலுக்குள் பாகங்களின் பாதிப்பும் அதிகரிக்கிறது. உடல் எடையால் பலர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உடல் எடை குறைத்தாலே பல பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.
எடை இழப்புக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். உடல் எடை இழப்புக்கு நீங்கள் பல வகை உணவுகளை உட்கொண்டிருக்கலாம், ஆனால் என்றாவது கருப்பு உணவு என முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுருக்கிறீர்களா? இந்த 5 கருப்பு உணவுகளை உட்கொள்ளலாம். இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இதோடு உடற்பயிற்சி செய்வது கூடுதல் சிறப்பாகும்.
உடல் எடையை குறைக்க உதவும் கருப்பு உணவுகள்
உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உணவுகளை உட்கொள்ளலாம்.
கருப்பு அரிசி
கருப்பு அரசி என்பதை சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், பலர் பார்த்திருக்கிறவே மாட்டார்கள். ஆம், கருப்பு அரிசி சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்து வரக் கூடிய உணவாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவு கருப்பு அரிசியாகும். இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கருப்பு அரிசியில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உங்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறிப்பாக கருப்பு அரிசியில் வெள்ளை அரிசியை விட குறைந்த கிளைசெமிக் பண்புகள் உள்ளது. இது இரத்த் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
சியா விதைகள்
பலரும் கேள்விப்பட்டிருக்கும் பொருள்தான் இது. பெரும்பாலான ஜூஸ் கடைகளில் சியா விதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சியா விதையில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 அதிகமாக உள்ளது. இதன் பண்புகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல் போன்று வரும். இதை சாப்பிடலாம், இதை ஜூஸ்களில் கலந்தும், தயிர், ஓட்மீல் போன்றவற்றில் கலந்தும் சாப்பிடலாம். சியா விதைகள் சாப்பிடுவது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
கருப்பு பருப்பு
கருப்பு பருப்பு எனப்படும் இதில் நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது குறைந்த கலோரிகள் கொண்டுள்ளது. எடை இழப்புக்கு பெருமளவு இது உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் இது பெரிதளவு உதவுகிறது.
கருப்பு பருப்புகளில் தயாரிக்கப்படும் பயிறுகள் இப்போது பல இடங்களில் விற்கப்படுகிறது. உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்துபவர்கள் தவறாமல் எடுக்கும் உணவு இதுவாகும்.
பிளாக்பெர்ரி
பெர்ரி வகைகளில் ஒன்றாக இந்த பழம் இருக்கிறது. இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது எடை இழப்புக்கு பெருமளவு உதவுகிறது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. இதில் வைட்டமின் சி, அந்தோசயினின்கள் போன்ற பண்புகள் உள்ளது.
இது உடலின் கலோரிகளை முற்றிலும் எரிக்க உதவுகிறது. பிளாக் பெர்ரி ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். தாராளமாக பிளாக் பெர்ரியை உங்கள் தினசரி உணவு முறையில் இணைத்துக் கொள்ளலாம்.
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸ் என்பது நாம் காலம் காலமாக பார்த்து வரும் உணவுகளில் ஒன்றாகும். இதில் அதிக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் கலோரிகளை முற்றிலும் எரிக்க உதவுகிறது.
கருப்பு பீன்ஸ் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. கருப்பு பீன்ஸ் என்பது உடல் எடை குறைக்க பெருமளவு உதவுவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும்.
Image Source: FreePik