Does the anti inflammatory diet help you lose weight: பொதுவாக நாள்பட்ட அழற்சி காரணமாக உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த கட்டுப்பாடற்ற வீக்கமானது பல சுகாதார நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், இது ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நாள்பட்ட வீக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். ஏனெனில், இந்த நாள்பட்ட வீக்கத்தின் காரணமாக படிப்படியாக ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை கூட சேதப்படுத்தப்படலாம்.
இது நீரிழிவு, இதய நோய், கொழுப்பு கல்லீரல் மற்றும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனினும், இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட அன்றாட உணவில் சில ஆரோக்கியமான எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இதற்கு அழற்சி எதிர்ப்பு உணவுகள் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அழற்சி எதிர்ப்பு உணவுகள் பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவு வகைகளாகும். இவை ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவையாகும். இது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எடையிழப்புக்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகள் வீக்கத்தைக் குறைத்து, எடையிழப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cardio Exercises: உண்மையிலேயே கார்டியோ ஒர்க் அவுட் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க உதவுமா?
எடையிழப்புக்கு அழற்சி எதிர்ப்பு உணவுகள் எவ்வாறு உதவுகிறது?
முதலில் உடல் எடையைக் குறைப்பதற்கு அழற்சி எதிர்ப்பு உணவுகள் எவ்வாறு உதவுகின்றன என்பதற்கான காரணங்களைக் காணலாம்.
- உடலில் உள்ள குறைந்த அளவிலான வீக்கம் உடல் எடையை அதிகரிக்கக் கூடும். இதன் விளைவாக, எடையிழப்பு உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி வழக்கங்கள் போன்றவை பயனற்றதாகிவிடும். எடையிழப்புக்கு சீரான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைப் போலவே வீக்கத்தைக் குறைப்பதும் முக்கியமானதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
- அழற்சி எதிர்ப்பு உணவுகள் பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்தவை ஆகும். இது குறைவான கலோரிகளைக் கொண்டவையாகும். எனவே, இது கலோரி பற்றாக்குறையைப் பின்பற்றும் நபர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இவ்வாறு உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது.
- பொதுவாக நாள்பட்ட வீக்கமானது உடல் பருமன் உள்ளிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் இணைக்கப்பட்டதாகும். இந்நிலையில், அன்றாட உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க முடியும். இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்க உதவுகிறது.
- காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற பெரும்பாலான அழற்சி எதிர்ப்பு உணவுகள் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை பசியைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுகள் உடல் எடையை ஆதரிக்க உதவுகிறது.
எடையிழப்புக்கு உதவும் அழற்சி எதிர்ப்பு உணவுகள்
பெர்ரி, ப்ரோக்கோலி, வால்நட்ஸ், பாதாம், அவகேடோ, குடை மிளகாய், கிரீன் டீ, கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இவை அனைத்துமே உடல் எடையிழப்புக்கு உதவக்கூடியதாகும். மேலும், மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயம் போன்ற மசாலாப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடையைக் குறைக்க டயட் ஃபாலோ பண்றீங்களா? அப்ப இந்த பொருள் சேர்க்க மறந்திடாதீங்க
வீக்கத்தைத் தூண்டும் உணவுகள்
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த சில உணவுகள் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சில ஆரோக்கியமற்ற உணவுகள் வீக்கத்தை ஊக்குவிக்கும் அபாயம் ஏற்படலாம். அதன் படி, டிரான்ஸ் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்ற சில உணவுகள் வீக்கத்தைத் தூண்டும் அபாயம் கொண்டதாகும். எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அழற்சி எதிர்ப்பு உணவின் நன்மைகள்
- எடையிழப்பைத் தவிர, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுகள் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
- இது உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- கீல்வாதம் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அறிகுறிகளை மேம்படுத்த உதவுகிறது.
- ஆற்றல் மட்டங்களை உயர்த்துவதில் இந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்த உணவுமுறை எடையைக் குறைக்க உதவுவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reduce Drinks: இந்த சாறு குடிச்சா சீக்கிரம் மூட்டு வலி குணமாகிடும்
Image Source: Freepik