Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

  • SHARE
  • FOLLOW
Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

மூளையை கூர்மைப்படுத்துவது எப்படி?

ஒருவருக்கு புத்திக் கூர்மை என்பது மட்டும் இருந்துவிட்டால் போதும் எதையும் சாதித்து விடலாம். படிப்பு, வேலை, வாழ்க்கை முன்னேற்றம் என அனைத்தும் படிப்படியாக அதுவே நடக்கும். உங்கள் மூளைக்கு ஆற்றலளிக்கக் கூடி சில குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…

உடற்பயிற்சி

நிற்கக் கூட நேரமில்லாமல் பிசியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம் தான். உடல் தகுதியைப் பேணினால்தான் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதே சிறந்த முடிவகளை எடுக்கும் தன்மை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் தினசரி வழக்கமான வொர்க் அவுட்டை நிர்ணயித்து உங்களை நீங்களே அதற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

உங்கள் அறிவாற்றல் செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட தினமும் ஒரு கப் காபி குடிக்கவும். காபியில் உள்ள காஃபின் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். கடுமையான வேலை அழுத்தத்தில் இருந்து ஒரு சிறிய காபி இடைவேளை எடுத்துக்கொள்வது உங்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உங்கள் மூளையில் மறைந்திருக்கும் புத்திசாலித்தனத்தையும், நீங்கள் பயன்படுத்தும் விதத்தையும் மேம்படுத்தும் சக்தி காபிக்கு உண்டு. ஆனால் காபி என்பது நிரந்தரமானது அல்ல.

சூரிய ஒளி அவசியம்

நீங்கள் விரும்பினால் காலை அல்லது மாலை வெயிலில் உடற்பயிற்சி செய்யுங்கள். சூரிய ஒளியில் இருந்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும். வைட்டமின் டி நிறைந்திருந்தால் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் சருமத்தை வயதாகாமல் பாதுகாக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு. உங்களுக்கு தேவையான வலிமையையும் ஆற்றலையும் சூரிய ஒளி வழங்கும். வெயிலில் சிறிது நேரம் செலவழிக்க முடியாவிட்டால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்களும் கலந்துரையாடலும்

கடுமையான போட்டியை எதிர்கொள்ள ஒருவர் தனியாக பயணிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்கள் தனிமையை எதிர்கொள்ளும்போது, ​​அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமைக்கு வழிவகுக்கிறது. தனிமையாக உணருவது உங்களை பயனற்றதாக ஆக்கிவிடும்.

தனிமை உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தலாம், தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே உங்களைச் சுற்றி ஒரு நல்ல ஆதரவு அமைப்பை உருவாக்குங்கள். ஆரோக்கியமான நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் உரையாடுங்கள். இத்தகைய வலுவான உணர்ச்சி தொடர்புகள் ஒரு நல்ல உந்து சக்தியாக செயல்படுகின்றன.

தியானம்

தியானம் உங்களை பல நல்லவைகளுக்கு வழிவகுக்கும். அனைத்தையும் சந்தித்தப்பின் தியானம் செய்வதற்கு பதிலாக ஆரம்பத்தில் இருந்தே தியானம் மேற்கொள்ளுங்கள். தியானம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஓய்வெடுக்கவும் உதவும். தினமும் குறைந்தது 10-15 நிமிடமாவது தியானம் செய்தால், உங்கள் மனம் விழிப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

நல்ல தூக்கம்

அதிகாலையில் எழுந்து நள்ளிரவு வரை வேலை செய்தால் பல சிக்கல் வரக் கூடும். நிம்மதியான ஆரோக்கியமாக தூக்கம் தேவை. தினசரி 6-8 மணிநேரம் தூக்கம் தேவை. ரியான தூக்கம் இல்லாததால் கடுமையான மன உளைச்சல், தலைவலி, எரிச்சல், பசியின்மை, அஜீரணம், மனக் கவலை உள்ளிட்டவைகளை சந்திக்க வழிவகுக்கும்.

இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

நல்ல உணவு

ஊட்டச்சத்து உள்ள நல்ல உணவு என்பது மிக முக்கியம். ஊட்டச்சத்து குறைபாடு உடலை மட்டுமல்ல, மூளையையும் பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், அதேபோல் பிடித்தமானவற்றை அளவோடு சாப்பிடுங்கள். இது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் வழங்கும்.

இவை அனைத்தும் மூளை ஆற்றலை மேம்படுத்தும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும் போதோ அல்லது அதை உணரும் போது மருத்துவரை சந்திப்பது நல்லது.

image source: freepik

Read Next

Eye Flu: அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிவோம் வாருங்கள்

Disclaimer

குறிச்சொற்கள்