Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!

  • SHARE
  • FOLLOW
Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!

மூளைத் திறனை மேம்படுத்தவும், கூர்மையாக இருக்கவும் பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால், மூளை அறிவாற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்த ஒரு நாள் மட்டும் பின்பற்றுவது போதாது. அதாவது மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், புத்திசாலித்தனம் மற்றும் மூளைத் திறனை அதிகரிக்கவும் தினந்தோறும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும். இதில் மூளையை சிறந்த நிலையில் வைக்க உதவும் பழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tobacco Addiction: புகையிலை பிடிப்பதிலிருந்து விடுபட முடியலயா? இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க

மூளைத் திறன் அதிகரிக்க உதவும் பழக்க வழக்கங்கள்

ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வது

ஆர்வமுடன் இருப்பது கற்றல் மற்றும் புதுமைக்கு உகந்த சக்தியாக விளங்குகிறது. எப்போதும் ஆர்வத்துடன் இருப்பது மனம் புதிய தகவல்களைத் தேட அனுமதிப்பதுடன், கேள்விகளைக் கேட்கவும், விஷயங்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் ஆராயவும் உதவுகிறது. இது மூளையைக் கற்றலுக்கு தயார்படுத்துகிறது. இதன் மூலம் மூளையானது அந்தத் தலைப்பு தொடர்பான தகவல்களை நினைவில் வைத்திருக்கிறது.

ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வது, அது ஒரு புதிய மொழியாக இருப்பினும், ஒரு இசைக்கருவியாக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்காக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள முயற்சிப்பது எளிமையானதாக இருக்கலாம். இவ்வாறு தினந்தோறும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வத்தைக் காட்டுவது வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையானது மூளை ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். எனவே தினந்தோறும் வழக்கமான உடல் செயல்பாடு, சீரான உணவு மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவை மூளை செயல்பாட்டை ஆதரிக்க உதவும் கூறுகளாகும். பொதுவாக உடற்பயிற்சி செய்வது மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, புதிய நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே தினமும் நடைபயிற்சி, நீச்சல் அல்லது யோகா போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

அதே போல, உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தேவையாகும். அதாவது ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது. மேலும் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற நினைவாற்றல் நடைமுறைகள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் முடியும். ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் மூளைத்திறனை எதிர்மறையாக பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு தினமும் இந்த காலை பழக்க வழக்கங்களை பின்பற்றுங்க

நல்ல தூக்கம்

மூளை சரியாக செயல்பட நல்ல, தரமான தூக்கம் அவசியமாகும். ஏனெனில் தூக்கத்தின் போது மூளை அன்றைய தகவலை செயலாக்குவதுடன், நினைவுகளை ஒருங்கிணைக்கிறது. கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு முக்கிய காரணியாக விளங்குவது தூக்கம் ஆகும். போதுமான தூக்கம் இல்லாதது அறிவாற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.

அதன் படி, பெரியவர்கள் இரவு நேரத்தில் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும். அதே போல, நிலையான உறக்க நேர அட்டவணைகள் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். இது மேம்படுத்தப்பட்ட தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதே சமயம், படுக்கைக்கு முன் திரைகள் பார்ப்பதைத் தவிர்த்து தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது சோர்வைத் தவிர்ப்பதுடன், மூளையைப் பாதுகாப்பாகவும், புத்துயிர் பெறுவதற்கும் தேவையான நேரத்தை வழங்குகிறது.

மூளை செயல்பாட்டிற்கான உலர் பழங்கள்

உணவில் உலர் பழங்களைச் சேர்ப்பது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகரிக்கவும் உதவுகிறது. வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் நினைவகம் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகிறது. அதே போல, பாதாமில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகும். மேலும் முந்திரி சேர்த்துக் கொள்வது உடலுக்குத் தேவையான மக்னீசியம் சத்துக்களை வழங்குகிறது. இது மூளை செயல்பாடு மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது போன்ற இன்னும் பல ஆரோக்கியமான தினசரி செயல்பாட்டின் உதவியுடன் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும் இது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Garlic Under Pillow: தலையணைக்கு அடியில் பூண்டு வைப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Image Source: Freepik

Read Next

Tobacco Addiction: புகையிலை பிடிப்பதிலிருந்து விடுபட முடியலயா? இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer