$
Is It Good To Keep Garlic Under Pillow: ஒவ்வொரு நாள் இரவு தூக்கமும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்று பலரும் இரவு தூக்கத்தை புறக்கணித்து லேப்டாப், மொபைல், டிவி திரைகளில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். நல்ல தூக்கம் பெற பல வழிகள் உள்ளன. இதில் பூண்டு நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
உணவுப் பொருளான பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. உணவில் பூண்டு பற்களை அதிகம் சேர்த்துக் கொள்வது விரைவில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதற்கு பூண்டில் உள்ள அல்லிசின் என்ற ஆர்கனோசல்பர் கலவை ஆகும். புதிய பூண்டை நறுக்கும் போது அல்லது நசுக்கும் போது அல்லினேஸ் என்ற நொதியானது அல்லியினை அல்லிசினாக மாற்றுகிறது. இதுவே பூண்டின் வாசனைக்குக் காரணமாகிறது. இந்த அல்லிசினானது உடலில் உள்ள நுண்ணுயிரிகளைத் தடுக்க உதவுகிறது. தலையணைக்கு அடியில் பூண்டை வைத்து ஏன் தூங்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health Foods: மனநிலையை மேம்படுத்தும் டாப் உணவுகள் இது தான்!
நல்ல தூக்கம் பெறுவதில் பூண்டின் பங்கு என்ன தெரியுமா?
பூண்டு வைட்டமின் பி1 சத்துக்களை உள்ளடக்கிய நல்ல உணவுப்பொருளாகும். இது தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பூண்டின் சுவை மற்றும் அதில் நிறைந்துள்ள பல்வேறு பண்புகள் துர்நாற்றம், கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துத் திறம்பட போராடுகிறது. இதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பூண்டில் வெளியாகும் அல்லிசின் கலவையே தொற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது.

பூண்டில் வைட்டமின்கள் பி6, வைட்டமின் சி, தியாமின், பாந்தோதெனிக் அமிலம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் தூங்கும் போது பூச்சிகள், சிலந்திகள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பூண்டு
தலையணையின் கீழ் ஒரு பல் பூண்டு தூக்கம் மற்றும் தூக்கக் கோளாறுகளை மேம்படுத்த உதவுகிறது. பூண்டில் உள்ள கந்தகமே அதன் வலுவான மற்றும் கடுமையான வாசனைக்குக் காரணமாகிறது. இந்த வாசனை உடலில் அமைதியான விளைவை ஏற்படுத்துவதற்கும், தூக்கத்தைத் தூண்டுவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.
பூண்டு நிறைந்த பானத்தை எடுத்துக் கொள்வது முன்பை விட புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் இருக்க வைக்கிறது. பூண்டு பானத்தைத் தயார் செய்ய சிறிய கடாயில் ஒரு பல் பூண்டு சேர்த்து நசுக்க வேண்டும். பின்னர் ஒரு கிளாஸ் பால் சேர்க்க வேண்டும். இதனுடன், தேன், வெல்லம், சர்க்கரை போன்றவற்றை இனிப்புக்காக சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அடுப்பை அணைத்து அந்த கலவையை கப் ஒன்றில் சேர்த்து, அதில் ஒரு சிட்டிகை அளவு கருமிளகு சேர்க்கலாம். இதைச் சரியாகக் கலந்து, படுக்கைக்குக் கலந்து செல்லும் முன்னதாக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது அல்லது பூண்டு நிறைந்த பானத்தை எடுத்துக் கொள்வது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Person: அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏன் வழக்கமாக்க வேண்டும் தெரியுமா?
Image Source: Freepik