$
How Many Garlic Cloves a Day For Health: நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருள்களின் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுப்பொருள்களையே எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பர். இதில் பூண்டு எடுத்துக் கொள்வதும் அடங்கும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பூண்டின் முழுப் பலன்களையும் பெற, பச்சைப் பூண்டை உட்கொள்ளலாம்.
ஆனால் நிபுணர்களின் ஆலோசனையில்லாமல், இதை அதிகமாகவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்வது தீங்கு விளைவிக்கலாம் அல்லது எந்த பலனையும் தராமல் போகலாம். பூண்டில் நிறைந்துள்ள சல்பியூரிக் அமிலம் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில், பச்சை பூண்டு தினந்தோறும் எவ்வளவு உட்கொள்ளலாம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லது? ஆயுர்வேதம் கூறும் கருத்து இதோ
ஒரு நாளைக்கு எவ்வளவு பச்சைப் பூண்டு பல் சாப்பிடுவது நல்லது?
பச்சைப் பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், இதை மருத்துவர்கள் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது. அதன் படி, ஒரு சாதாரண நபர் ஒரு நாளைக்கு 1 முதல் 2 பல் பச்சைப் பூண்டு சாப்பிடலாம். இதை விட அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம்.
பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதை அப்படியே விழுங்கி விடாமல், மென்று அல்லது நசுக்கி சாப்பிடலாம். மேலும் இதை சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டாம். மாற்றாக, வெதுவெதுப்பான நீரை மட்டும் குடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தொப்பைக் கொழுப்பை வழித்து எடுக்க… இந்த ஆயுர்வேத பொடி போதும்!
பச்சை பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பச்சைப் பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- பூண்டில் உள்ள பண்புகள், உடலிலிருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
- பச்சைப் பூண்டு உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- பச்சைப் பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- பூண்டில் நிறைந்துள்ள கூறுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- இவை வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

பச்சைப் பூண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அருமையான உணவு வகையாகும். எனினும் இதை சரியான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். இந்த சூழ்நிலையில் மருத்துவ ஆலோசனையின்றி பச்சைப்பூண்டு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Arjuna Bark Tea: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அர்ஜூனா பட்டை டீ. எப்படி தெரியுமா?
Image Source: Freepik