Sat Oct 24, 2026 | 01:24 AM IST

Doctor Verified

Arjuna Bark Tea: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அர்ஜூனா பட்டை டீ. எப்படி தெரியுமா?

Arjuna Bark Tea: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அர்ஜூனா பட்டை டீ. எப்படி தெரியுமா?Arjuna Bark Tea: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அர்ஜூனா பட்டை டீ. எப்படி தெரியுமா?

Is Arjuna Bark Tea Good For Health: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், உணவுக் கோளாறுகள் மற்றும் மோசமான தினசரி வழக்கங்களால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுவதே கொலஸ்ட்ராலின் வேலை ஆகும்.

ஆனால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உற்பத்தி உடலில் நிகழ்கிறது. ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக இரத்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம். இதற்கு அர்ஜூனா பட்டை டீ உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Aak Leaves For Body Pain: உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்?

அர்ஜூனா பட்டை டீ தரும் நன்மைகள்

அர்ஜூனா பட்டை ஆயுர்வேதத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவது பல தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கே. பாண்டே அவர்களின் கூற்றுப்படி, “அர்ஜூனா பட்டையில் லாஜிக் அமிலம், பீட்டா-சிட்டோஸ்டெரால், ட்ரைஹைட்ராக்ஸி ட்ரைடர்பீன் மற்றும் மோனோகார்பாக்சிலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் அதிகரித்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தீவிர இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது” என்று கூறியுள்ளார்.

அர்ஜூனா பட்டையில் ஹைப்போலிபிடெமிக் என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இது உடலில் அதிகரித்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், அர்ஜூனா பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிக கொலஸ்ராலைக் குறைக்க உதவுகிறது. இந்த பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வது அதிக கொழுப்பைக் குறைப்பதுடன், நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதனைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ghee For Cracked Heels: பாத வெடிப்பால் ரொம்ப அவதியா? அதுக்கு இந்த இரண்டு பொருள்கள் போதும்

அர்ஜூனா பட்டை தேநீர் உட்கொள்ளும் முறை

அர்ஜூனா பட்டையிலிருந்து எளிதாக டீ தயார் செய்யலாம். இதைச் செய்ய, பாத்திரம் ஒன்றில் ஒரு கப் பாலை எடுத்து, அதில் அரைத்த அர்ஜூனா பட்டையைச் சேர்க்க வேண்டும். இதை நன்கு கொதிக்க வைத்த பிறகு வடிகட்டி பின் இனிப்புக்காக தேன் சேர்க்கலாம். இந்த டீயை தினமும் காலையில் குடித்து வருவது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

அர்ஜூனா பட்டை டீயை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இதனுடன், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Joint Pain: மூட்டு வலியால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த மூலிகைகளை யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

→ Face Glowing Tips: முகத்தை பளிச்சினு வைக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.