$
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் சில பானங்கள் விஷமாக மாறும். அவற்றைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. ஆனால் இந்த பாத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத சில பானங்கள் மற்றும் உணவுகள் உள்ளன. பல்வேறு எதிர்வினைகள் காரணமாக அவை நச்சுத்தன்மையுடையதாக மாறக்கூடும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படியானால் செம்பு பாட்டிலில் எந்தெந்த மாதிரியான பானங்களை பருகக்கூடாது என அறிந்து கொள்ளுங்கள்...
தண்ணீர்:
அதிகாலையில் செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இது வயிறு, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

பலர் இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காலையில் குடிப்பார்கள். இது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.
மோர்:
மோர் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் மோர் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. தயிரில் உள்ள பண்புகள் உலோகத்துடன் எதிர் வினையாக்கி. அது உங்களை ஆழமாக பாதிக்கிறது. சிலர் தாமிரத்தட்டில் சாதம் உண்பதும் உண்டு. அந்த நேரத்தில் அதில் தயிர் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்ற பால் பொருட்களை செம்பு பாத்திரத்தில் வைப்பது தீங்கு விளைவிக்கும். தாமிரம் பாலில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் வினைபுரியக்கூடியது. இது ஃபுட் பாயிஷனுக்கு வழிவகுக்கும்.
இதையெல்லாம் செம்பு பாத்திரத்தில் சேமிக்கக்கூடாது:
செம்பு பாத்திரத்தில் மாம்பழம், ஊறுகாய், சாஸ், ஜாம் ஆகியவற்றை சேமித்து வைக்கவே கூடாது. இந்த உணவுகள் தாமிரத்துடன் வினைபுரியக்கூடியவை. காலப்போக்கில் இவை உங்களுக்கு பலவீனம், குமட்டல் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும். மேலும் ஃபுட் பாயிஷனுக்கு வழிவகுக்கும்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, 6.0 க்கும் குறைவான pH அளவைக் கொண்ட உணவுகளை செம்பு பாத்திரத்தில் சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் உணவு நோயை உண்டாக்கும்.
தேன்+எலுமிச்சை சாறு:
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதை காப்பர் கிளாஸில் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சையில் உள்ள அமிலம் தாமிரத்துடன் வினைபுரிகிறது. இது வயிற்று வலி, வாயு பிரச்சனைகள் மற்றும் வாந்தியையும் ஏற்படுத்தும்.
Imge Source : Freepik