Copper Bottle Water: செம்பு பாத்திரத்துல ஏன் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Copper Bottle Water: செம்பு பாத்திரத்துல ஏன் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?


Health Benefits Of Drinking Water In Copper: பெரும்பாலும், மக்களிடையே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாடே அதிகரித்து வருகிறது. ஆனால், இதில் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மாற்றாக, செப்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தலாம். செப்பு பாத்திரம் ஆனது மனிதனுக்குத் தெரிந்த முதல் தனிமம் ஆகும். இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே தலைவலி, வெட்டுக்கள், நரம்புகள் போன்ற பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்க தாமிரம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை தரும். இதில் தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

நாள்தோறும் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் காண்போம்.

புற்றுநோயைத் தடுக்க

தாமிரம் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவை ஃப்ரீ ரேட்டிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது சருமம் மற்றும் கண்களுக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது. இவை சூரிய கதிர்களிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து ஒருவரை பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ragi Benefits: நீங்க எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்ப ராகி எடுத்துக்கோங்க.

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க

தாமிரத்தில் தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அல்லது டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கலாம். மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் தாமிரமும் ஒன்று. தாமிரத்தில் தண்ணீர் அருந்துவது உடலில் செம்பு அல்லது தாமிர பற்றாகுறையினை நீக்க உதவுகிறது. ஏனெனில், உயர் இரத்த அழுத்தத்தின் வளர்ச்சிக்கு தாமிரப் பற்றாக்குறையே காரணமாகும். குறிப்பாக பெரியவர்களே அதிகம் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்.

இரத்த சோகையைத் தடுக்க

உடலில் இரத்த சோகையைத் தவிர்க்க ஹீமோகுளோபின் அதிகளவு தேவைப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் உதவுகிறது. அதே சமயம் தாமிரத்தின் பற்றாக்குறை ஹீமோகுளோபின் அளவைக் குறைத்து இரத்த சோகையை ஏற்படுத்தலாம். மனித உடலில் ஏற்படும் தாமிரக் குறைபாடு பிரச்சனை அரிதான இரத்தக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். இந்தக் குறைபாட்டைத் தவிர்க்க செப்பு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

கீல்வாதத்திற்கு நிவாரணமாக

தாமிரத்தில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தின் அறிகுறிகளை அனுபவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. ஏனெனில் எலும்புகளைப் பலப்படுத்த உதவும் பண்புகளைத் தாமிரம் கொண்டுள்ளது. மேலும் இது மூட்டு வலியைக் குணப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Saffron Tea Benefits: மூட்டுவலி காணாமல் போக சூப்பரான இந்த டீ குடிங்க.

இதய நோய் தடுப்பானாக

தாமிரம் சிறந்த உலோகமாகும். இது பிளேக் சுத்தம் மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கத் தேவையான இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. தாமிரக் குறைபாடு இதய தசைகளை செயலிழக்கச் செய்யலாம். இதனால் போதுமான அளவு இரத்தம் பம்ப் செய்யாமல், உடலில் இரத்த ஓட்டம் பலவீனமடையலாம். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க தாமிரக் குறைபாட்டைத் தடுப்பது நல்லது.

முதிர்வடைவதைத் தடுக்க

தாமிரத்தை அடிப்படையாக வைத்து அழகுபடுத்துதல் பொருள்களைத் தயாரிப்பர். பல்வேறு தோல் பராமரிப்புப் பொருள்களிலும் தாமிரம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், செல் மீளுருவாக்கத்திற்கு உருவாகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தைராய்டு அளவை நிர்வகிக்க

தைராய்டு சுரப்பியின் முரண்பாடுகளை சமநிலைப்படுத்த தாமிரம் உதவுகிறது. தைராய்டு சுரப்பியின் அதிகப்படியான சுரப்பினால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்துப் போராட தாமிரம் பெரிதும் உதவுகிறது. தாமிரத்தின் பற்றாக்குறையால் தைராய்டு சுரப்பி செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இது ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Immunity: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் குடியுங்க!

Image Source: Freepik

Read Next

Dry Fruits: இந்த ட்ரை ஃப்ரூட்களை மறந்தும் காலையில் சாப்பிடாதீங்க!

Disclaimer