Dry Fruits: இந்த ட்ரை ஃப்ரூட்களை மறந்தும் காலையில் சாப்பிடாதீங்க!

  • SHARE
  • FOLLOW
Dry Fruits: இந்த ட்ரை ஃப்ரூட்களை மறந்தும் காலையில் சாப்பிடாதீங்க!


Dry fruits to eat and avoid in morning for good health: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முயற்சிக்கும்போது, நம்மில் பலர் உணவுகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்போம். குறிப்பாக, காலையில் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் சாப்பிடுவது என பலவற்றை கடைபிடிப்போம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மட்டும் அல்ல, காலையில் அப்பிட நேரம் இல்லாமல் அவதி அவதியாக வேலைக்கு கிளம்புபவர்களும் காலையில் ட்ரை ஃப்ரூட் சாப்பிடுவார்கள்.

ஏனென்றால், காலையில் ட்ரை ஃப்ரூட் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்ற கருத்து நிலவுகிறது. ட்ரை ஃப்ரூட்களை காலையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், அனைத்து உலர் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது அல்ல. ஆம், உண்மைதான். சில ட்ரை ஃப்ரூட்களை காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது காலை உணவாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. அவை செரிமான பிரச்சினை முதல் இரத்த சர்க்கரை வரை பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். காலையில் சாப்பிட கூடாத உலர் பழங்கள் எவை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Dry Fruits For BP: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த உலர் பழங்கள் எல்லாம் சாப்பிடுங்க

உலர் திராட்சை (Raisins - கிஸ்மிஸ்)

பிரபலமாக கிஸ்மிஸ் என அழைக்கப்படும் உலர் திராட்சை (Raisins) ஊட்டச்சத்து நிறைந்தது. இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. நம்மில் பலர் இதை காலையில் வெறும் வயிற்றி சாப்பிடுவோம். இன்னும் சிலர் இதை ஊறவைத்து சாப்பிடுவோம். காலையில் வெறும் வயிற்றில் கிஸ்மிஸ் சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்க வழிவகுக்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்கள் காலை உணவில் ஒரு பகுதியாக இவற்றை சேர்க்கலாம்.

உலர்ந்த அத்தி (​Dried Figs)

உலர்ந்த அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு அருமையான சிற்றுண்டி. இது எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இதிலும் இயற்கையான சர்க்கரை உள்ளது. இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அசௌகரியம் அல்லது வீக்கம் ஏற்படலாம். எனவே, உலர்ந்த அத்திப்பழங்களை புரதம் அல்லது முழு தானியங்களுடன் இணைத்து சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து சமநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமான அசௌகரியத்தை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Dry Fruits Tips: உலர் பழங்களை இப்படி சாப்பிட்டால் அதீத நன்மைகள்

பேரிச்சம்பழம் (Dates)

பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் 2 பேரிச்சம்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், வெறும் வயிற்றி இதை சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. அவற்றின் இயற்கையான சர்க்கரைகள் விரைவான இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இவற்றை புரத உணவுகளுடன் இணைத்து சாப்பிடுவதால், சர்க்கரை வேகத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நீடித்த ஆற்றலையும் வழங்குகிறது.

ஆப்ரிகாட்ஸ் (Apricots)

ஆங்கிலத்தில் ஆப்ரிகாட்ஸ் என அழைக்கப்படும் உலர்ந்த பாதாமி பழங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இவற்றிலும் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. இவற்றை வெறும் வயிற்றில் அதிகமாக உட்கொள்ளும் போது செரிமானத்தை சீர்குலைக்கும். இதை, உலர்ந்த பாதாமி பழங்களை புரதம் அல்லது முழு தானியங்களுடன் இணைத்து சாப்பிடவும்.

இந்த பதிவும் உதவலாம் : Dry Fruits Benefits: உலர் பழங்களை சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்? குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

உலர் பிளம்ஸ் (​Prunes)

உலர் பிளம்ஸ் அதிக நார்ச்சத்து நிறைந்தது. ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது அல்ல. உலர் பிளம்ஸ்-யில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இவற்றை தனியாக உட்கொள்ளும் போது, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

Pic Courtesy: Freepik

Read Next

Heart Patients: இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாமா? உண்மை தகவல் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்