Sat Sep 12, 2026 | 01:26 AM IST

Heart Patients: இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாமா? உண்மை தகவல் இதோ!

Heart Patients: இப்போதெல்லாம் பல்வேறு காரணங்களால் இதய நோய் ஏற்படுகிறது. வயது வரம்பின்றி இதய நோய் ஏற்படத் தொடங்கிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என வயது வரம்பின்றி இதய நோய் பிரச்சனை ஏற்படத் தொடங்கிவிட்டது. இதய நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதய நோயாளிகள் வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. இதய நோய்கள் உள்ள நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் உணவைப் பற்றி குழப்பமடைகிறார்கள். உணவுப் பழக்கத்தில் ஏற்படும் குளறுபடிகளால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளின் அபாயமும் அதிகரிக்கிறது.

இதய நோயாளிகள் பெரும்பாலும் சிக்கன் சாப்பிடுவதில் குழப்பம் அடைகிறார்கள். இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாமா வேண்டாமா மற்றும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாமா?

இதய நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நோயில், உணவுக் கோளாறுகள் ஆபத்தானவை. இன்றைய காலகட்டத்தில் கோழிக்கறி சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. அசைவம் என்றால் கோழிக்கறியை புறக்கணிக்கவே முடியாது.

சுவை தவிர, இதை உட்கொள்வது புரதம் உட்பட உடலுக்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால் சில சூழ்நிலைகளில் கோழி சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.

கோழிக்கறியை எப்படி சாப்பிடலாம்?

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோழிக்கறி அல்லது இறைச்சியை மிகவும் கவனமாக உட்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் வேகவைத்த கோழியை சரிவிகித அளவிலோ அல்லது குறைந்த மசாலா மற்றும் சுத்தமான எண்ணெயிலோ சமைத்து சாப்பிடலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். இந்த சூழ்நிலையில், கொழுப்பு இல்லாத மற்றும் சீரான அளவில் கோழியை உட்கொள்வது முக்கியம்.

இதய நோயாளிகள் சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தவிர அதிக கொழுப்புள்ள சிக்கன் சாப்பிடுவதும் இதய நோயாளிகளின் பிரச்சனைகளை அதிகரிக்கும். இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அசைவ உணவை உண்ணும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்க, பச்சைக் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகளில் ஏராளமான வைட்டமின் கே உள்ளது, அதை தொடர்ந்து உட்கொள்வது தமனிகளைப் பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, இந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் டயட்டரி நைட்ரேட் உள்ளது. இவற்றை தொடர்ந்து உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும்.

இதுதவிர, தினமும் உடற்பயிற்சி செய்வதும், புகையிலை மற்றும் மது அருந்துவதை நிறுத்துவதும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதயம் தொடர்பான நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Pic Courtesy: FreePik

Read Next

Olive Oil Side Effects: சமையலுக்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் பயன்படுத்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content