Dry Fruits Benefits: உலர் பழங்களை சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்? குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

  • SHARE
  • FOLLOW
Dry Fruits Benefits: உலர் பழங்களை சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்? குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

இதுகுறித்து குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பூர்ணிமா பிரபு, பி.டி.. இந்துஜா மருத்துவமனை & எம்ஆர்சி. மும்பை கூறுய கருத்துக்களை பார்க்கலாம். உலர் பழங்களின் நன்மைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: Kids Skin Issues: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் தோல் பிரச்சனைகள்: தடுக்க வழிமுறை

டாக்டர் பிரவு கூறிய கருத்துப்படி, உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் மிகவும் சத்தானவை, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் ஏ, டி, இ, கே நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் பி காம்ப்ளக்ஸ், கால்சியம் ஜிங்க் போன்ற தாதுக்கள், வைட்டமின் சி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இதில் அதிகம் உள்ளது.

WebMd இன் கூற்றுப்படி , உலர் பழங்களில் நல்ல கொழுப்புகள் உள்ளன. அவை ALA - ஆல்பா-லினோலெனிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஆகும். மூளை ஆற்றலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள்ஸ வால்நட், ஆளிவ் / சியா விதைகளில் உள்ளன. அவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தசைகளின் வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன. இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளது.

செரிமான ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து

உலர்ந்த பழங்களின் தனித்துவமான நன்மைகளில் ஒன்று அவற்றின் அதிக நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது, இது சில நேரங்களில் குழந்தைகளை தொந்தரவு செய்யலாம்.

ஊறவைத்த மற்றும் பிசைந்த உலர்ந்த பழங்களை சிறிய அளவில் கொடுக்க ஆரம்பிப்பதே நல்லது. உங்கள் குழந்தையின் வழக்கமான செரிமானத்தை மெதுவாக ஊக்குவிக்கும்.

மூளையை அதிகரிக்கும் மூலங்கள்

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் முக்கியமானவை. அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் போன்ற உலர் பழங்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும். உங்கள் குழந்தையின் உணவில் இந்த பருப்பு வகைகளை சேர்த்துக் கொண்டால் அவர்களின் மூளை சக்திக்கு பெரும் பங்காக இருக்கும்.

இயற்கையான ஆற்றல்

உலர் பழங்கள் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் காரணமாக இயற்கையான ஆற்றல் மூலமாகும். சிற்றுண்டியாக ஒரு சிறிய பகுதியைச் சேர்ப்பது உங்கள் குழந்தைக்கு தேவையான நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

வைட்டமின் நிரம்பிய ப்ரேக் ஃபாஸ்ட்

உங்கள் குழந்தை திட உணவுகளில் ஆரம்வம் காட்ட ஆரம்பித்தவுடன், மென்மையான, நறுக்கிய மற்றும் பிசைந்த உலர் பழங்களை கொடுக்க ஆரம்பிக்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

உலர் பழங்களை எப்போது கொடுக்க ஆரம்பிக்கலாம்

உங்கள் குழந்தையின் உணவில் உலர் பழங்களை அறிமுகப்படுத்துவதற்கான நேரம் முக்கியமானது. பொதுவாக, உலர் பழங்கள் உட்பட திடப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிசைந்த வாழைப்பழங்கள் அல்லது சமைத்த இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய விருப்பங்களை தேர்ந்து எடுக்கவும்.

குழந்தைகள் 6 மாதங்கள் வரை பிரத்யேக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது திட உணவுகள் கொடுக்கப்படுகின்றன. எனவே இந்த வயதிலும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொடுக்கலாம். குறிப்பாக வாழ்க்கையின் முதல் 2 ஆண்டுகளில் உடல் வளர்ச்சி மற்றும் விரைவான மூளை வளர்ச்சிக்கான அதிக தேவையை தக்க வைத்துக் கொள்ள இந்த உணவு வகைகளை கொடுக்கலாம் என டாக்டர் பிரபு கூறியுள்ளார்.

சுமார் 8 முதல் 10 மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் படிப்படியாக சிறிய அளவில் நறுக்கிய மற்றும் ஊறவைத்த உலர்ந்த பழங்களை கொடுக்க ஆரம்பிக்கலாம். உங்கள் குழந்தையின் உணவில் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் எப்போதும் குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க: சிறு குழந்தைகளுக்கு இரவில் இருமல் வருவதற்கான காரணங்கள் என்ன? அறிவோம்! தடுப்போம்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒவ்வாமை உணர்வு இருந்தால், கவனமாக செயல்படுவது அவசியம். கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பருவத்திலும் எடுக்கும் எந்த முயற்சியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புதிதாக எந்த முயற்சியும் எடுப்பதற்கு முன் மருத்துவரின் அணுகலை பெறுவது நல்லது.

image source: freepik

Read Next

Juvenile Arthritis Impacts: இளம் மூட்டுவலி கண்களை எவ்வாறு பாதிக்கிறது

Disclaimer

குறிச்சொற்கள்