Juvenile Arthritis Impacts On Eyes: சிறார் மூட்டுவலி அல்லது இளம் மூட்டுவலி என்பது குழந்தைகளை பாதிக்கும் மிகவும் பொதுவான மூட்டு வலி ஆகும். இது இளம் முடக்கு வாதம் அல்லது குழந்தை பருவ மூட்டு வலி எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மூட்டுகள் உடல் ரீதியான பாதிப்பை சந்திக்க நேரிடலாம். மேலும் இந்த காயத்தின் விளைவாக குழந்தைகளின் உறுப்புகள் செயலிழக்கப்பட்டு ஊனமுற்றவர்களாக மாறலாம். இது குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையைப் பாதிப்பதாக அமைகிறது.
சிறார் மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணம்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, சிறார் மூட்டு வலி அல்லது இளம் மூட்டு வலிக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. ஆனால் இந்த இளம் மூட்டு வலி ஏற்படும் நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படாமல் போகலாம். உடலின் மற்ற பாகங்களில் மூட்டுகளைப் போல, கண்களும் இளம் மூட்டுவலியை சேதப்படுத்தும் உறுப்புகளில் ஒன்றாக அமைகிறது. இது யுவைடிஸை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
இளம் மூட்டுவலி எவ்வாறு கண்களை பாதிக்கிறது?
இளம் மூட்டு வலியானது குழந்தைகளுக்கு கண் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதாவது இளம் மூட்டு வலியால் பாதிக்கபப்ட்ட குழந்தைகள் அவர்களது கண்களின் உள்பகுதியில் வீக்கத்தை அனுபவிக்கலாம். இது யுவியா என அழைக்கப்படுகிறது. இதில் கருவிழி, சிலியரி உடல் மற்றும் கோராய்டு உள்ளது.
கண்ணின் ஒரு பகுதியான யுவியாவில் ஏற்படக்கூடிய அழற்சி பொதுவான கண் பிரச்சனையாகும். இதுவே யுவைடிஸ் என அழைக்கப்படுகிறது. இதில், யுவியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பாதிப்பது இரிடோசைக்ளிடிஸ் அல்லது இரிடிஸ் என குறிப்பிடப்படுகிறது.
யுவைடிஸ் காரணமாக ஏற்படும் கண் சிக்கல்
பொதுவாக கண்களில் வீக்கம் ஏற்படும் போது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இவை வடுக்கள் மற்றும் பார்வை சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், கடுமையான யுவைடிஸ் கிளைகோமா, கண்புரை மற்றும் இன்னும் பிற மீள முடியாத பார்வை இழப்பு பிரச்சனைகளை வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid In Children: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
கண் வீக்கத்தால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது அதிக வலியை உணரமால் இருக்கலாம். ஆனால், இளம் மூட்டு வலி உள்ள குழந்தைகளுக்கு கண்களில் பிரச்சனை ஏற்படும் போது, ஏதேனும் வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் மங்கலான பார்வை அல்லது லேசான எரிச்சலை அனுபவிப்பர். இது அரிதான சூழ்நிலையிலேயே நடக்கும். மற்ற நேரங்களில் குழந்தைகளின் கண் சிவப்பு அல்லது மங்கலாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் மிகவும் மெதுவாகத் தோன்றலாம்.
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
குழந்தைகள் கண் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால், உடனே கண் மருத்துவரை அணுகுவது முக்கியம். மேலும், மூட்டு வலியை அனுபவித்து வந்தால், வாத நோய் நிபுணரை அணுகி பார்வையிடுவது நல்லது. பொதுவாக மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண் பரிசோதனைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு மூட்டு வலி இருந்த காலம், வகை மற்றும் சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் பொறுத்து அமையும். எனினும், சிக்கல்களால் குழந்தை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் மற்றும் வாத நோய் நிபுணருடன் இணைந்து கண் பிரச்சனைகளையும், மூட்டு வலி பிரச்சனைகளையும் கண்டறிந்து தீங்கு விளைவிப்பதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Symptoms: குழந்தைகளைப் பாதிக்கும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்
Image Source: Freepik