Doctor Verified

Rainy Diseases: மழைக்காலத்தில் பரவும் நோய்த்தொற்றுக்களும், அதனைத் தடுக்கும் முறைகளும் இதோ!

  • SHARE
  • FOLLOW
Rainy Diseases: மழைக்காலத்தில் பரவும் நோய்த்தொற்றுக்களும், அதனைத் தடுக்கும் முறைகளும் இதோ!


இந்த பதிவும் உதவலாம்: Hyperthyroidism and Sex: ஹைப்பர் தைராய்டிசம் பாலியல் செயல்பாட்டை பாதிக்குமாம்! எப்படி தெரியுமா?

மழைக்காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

கோடைக்கால தாக்கத்தின் இடையில் ஏற்படும் பருவமழை மாற்றத்தால் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.

செரிமானக் குறைபாடு

பருவகால மாற்றத்தின் காரணமாக உடலில் செரிமான குறைபாடு ஏற்படலாம். இதில் உணவு செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனையானது வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

குறைவான நோயெதிர்ப்புச் சக்தி

பொதுவாக, மழைக்காலங்களில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். அதிலும் இந்த பருவமழை மாற்றம் நோயெதிர்ப்புச் சக்தியை வேகமாக குறைத்து, உடல் எளிதில் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சளி, இருமல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மழைக்கால நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

இதில் மழைக்கால நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும் முறைகளையும், நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பின் அதிலிருந்து விடுபடும் முறைகளையும் குறித்து மருத்துவர் நந்தகுமார் அவர்கள் விவரித்துள்ளார்.

நோயெதிர்ப்புச் சக்தி மேம்பாடு

மழைக்கால நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கும் முறைகளில் முதலாவதாக அமைவது நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதாகும். அதன் படி, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உணவுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். காலநிலைக்கு ஏற்ப உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

  • உதாரணமாக, பழ வகைகளில் ஆப்பிள், மாதுளை, பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இது தவிர, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர் வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு எலுமிச்சை தேநீர், இஞ்சி டீ, கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • உணவில் மஞ்சள் போன்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுப் பொருள்களைச் சேர்த்துக் கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • மேலும், சூப் வகைகளான காய்கறி சூப் போன்ற சூடான பானங்களை இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: World Thyroid Day 2024: உஷார்! நீங்க தினமும் கடைபிடிக்கும் இந்த பழக்கங்கள் தைராய்டை ஏற்படுத்துமாம்

சுற்றுச்சூழல் மேம்பாடு

மழைக்காலத்தில் பரவும் நோய்த்தொற்றுக்களில் பெரும்பாலானவை கொசுக்கடியால் ஏற்படுவதாகும். இதில் டெங்கு, மலேரியா மற்றும் இன்னும் பிற நோய்கள் கொசு பரவுவதால் உண்டாவதாகும். இதற்கு முக்கியமாக நாம் கொசு பரவுதலை ஊக்குவிக்கும் நீர்த்தேக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் முக்கியமாக ஏடிஸ் வகை கொசுக்களால், பகலில் பரவக்கூடிய நோய்த்தொற்றுக்களைச் சார்ந்தது டெங்கு காய்ச்சல் ஆகும். இது முக்கியமாக வீடுகளின் உள்ளே மற்றும் வீடுகளைச் சுற்றிக் காணப்படும் சுற்றுப்புற இடங்களில் பரவும் கொசுக்களால் ஏற்படுவதாகும்.

  • உதாரணமாக தண்ணீர் பாட்டில்கள், உடைந்த தேங்காய் மூடி போன்றவற்றின் மூலம் எளிதாக கொசு பரவல் அதிகரிக்கலாம்.
  • மேலும், வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நீர்த்தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கடியைத் தவிர்க்கலாம்.
  • இது தவிர, வெளியில் செல்லும் போது முழு ஆடைகளை அணிவது டெங்கு காய்ச்சல் அபாயத்தைத் தவிர்க்க உதவுகிறது.

இது போன்றே மலேரியா நோய்த்தொற்றுக்களும் கொசு பரவுதலால் ஏற்படுவதாகும். இதனைத் தவிர்க்கவும் இந்த வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். மலேரியா அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

மேலும் இந்த மழை அல்லது பனி காலத்தில் இன்புளுயன்சா வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கள் போன்றவை பொதுவான தொற்றுக்களாக கருதப்படுகிறது. உதாரணமாக மழைக்காலத்தில் தொண்டை வலி, எரிச்சல் தொடர்பான தொற்றுக்கள் பொதுவானதாகும். இதன் அறிகுறிகளாக, ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, தொண்டையில் பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க மருத்துவரை அணுகலாம்.

அதே சமயம், சுத்தமான உணவு, பானங்களை எடுத்துக் கொள்வது, வெதுவெதுப்பான நீர் அருந்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, இந்த காலகட்டத்தில் எந்தவொரு குளிர்காலத் தொற்றுக்கும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். எனவே, உடல் வலி, சோர்வு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற சிறிய அறிகுறிகளைக் கண்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் தீவிர நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Microplastics: ஆண்களின் விந்தணுக்களையும் விட்டுவைக்காத பிளாஸ்டிக்… இதன் தீமைகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

Microplastics: ஆண்களின் விந்தணுக்களையும் விட்டுவைக்காத பிளாஸ்டிக்… இதன் தீமைகள் இங்கே!

Disclaimer