What Lifestyle Causes Thyroid Problems: மனித உடலில் நாளமில்லா அமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவது தைராய்டு சுரப்பி ஆகும். இது கழுத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இந்த தைராய்டு சுரப்பி சுரப்பதற்கு பெரும்பாலும் உணவின் மூலம் அயோடினைப் பயன்படுத்துகிறது. இந்த தைராய்டு சரியாகச் செயல்படத் தவறினால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. அதாவது தைராய்டு அதிகளவு ஹார்மோனை வெளியிடுவதன் மூலமோ அல்லது போதுமான அளவு வெளியிடாததன் மூலமோ தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு நோய்களின் வகைகள்
- ஹைப்போ தைராய்டிசம்
- ஹைப்பர் தைராய்டிசம்
- தைராய்டு புற்றுநோய்
இந்த தைராய்டு சுரப்பி ஆனது ஆற்றல் நிலைகள், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் செய்யும் பழக்க வழக்கங்களால் தைராய்டு பிரச்சனை ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு இருப்பவர்கள் இந்த உணவை சாப்பிட்டால் இயல்பு நிலைக்கு வரலாம்!
தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்தும் பழக்க வழக்கங்கள்
தினமும் நாம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதில் தைராய்டை உண்டாக்கும் பழக்க வழக்கங்களையும், அதைத் தவிர்க்கும் முறைகளையும் காணலாம்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை
தற்கால வேகமான உலகில், பலரும் உட்கார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகின்றனர். பொதுவாக உடல் செயல்பாடு இல்லாதது எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் தைராய்டு செயல்பாடும் பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டும் மற்றும் ஒட்டுமொத்த தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே தினசரி வழக்கத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்த்து, உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
உணவு முறை
தைராய்டு ஆரோக்கியத்திற்கு உணவுத் தேர்வுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி செலினியம், துத்தநாகம் மற்றும் அயோடின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு தைராய்டு செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே மெலிந்த புரதங்கள், பிரேசில் பருப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து தைராய்டு-நட்பு உணவை ஆராய வேண்டும். கூடுதலாக, தைராய்டு குறைபாட்டைச் சரிசெய்ய ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, மருத்துவ ஆலோசனைப் படி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்
நவீன வாழ்க்கை முறையில் இடைவிடாத தேவைகளால் இன்று பலரும் அடிக்கடி மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் தைராய்டு உட்பட நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. இந்த நாள்பட்ட மன அழுத்தம் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து, தைராய்டு செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் தைராய்டு குறைபாட்டைச் சரி செய்ய முடியும். இதற்கு தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை மேற்கொள்வதன் மூலம் தைராய்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid Diet Plan: தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்?
சர்க்கரை உட்கொள்ளல்
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் வீக்கத்துடன் தொடர்புடையதாகும். இது தைராய்டு செயலிழப்புக்கும் வழிவகுக்கலாம். எனவே ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியைப் பாதுகாக்க, இயற்கை இனிப்புகள், சர்க்கரை நுகர்வு மற்றும் முழு உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தைராய்டு சுரப்பி ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாமம்.
தூக்கமின்மை பிரச்சனை
இன்றைய பிஸியான காலகட்டத்தில் பலரும் நல்ல தூக்கம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், போதுமான உறக்கம் பெறாதது தைராய்டு ஆரோக்கியத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தலாம். சீரற்ற தூக்க சுழற்சியால் ஹார்மோன் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம் என சில ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சிறந்த தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த நாள்தோறும் 7-9 மணி நேரத்தை இலக்காக வைத்து இரவு தூக்கத்திற்கு முன்னுரிமை தர வேண்டும்.
குடல் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வு
குடல் ஆரோக்கியத்துடன் தைராய்டு உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே குடல் பாக்டீரியாவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வானது ஆட்டோ இம்யூன் தைராய்டு நிலைகளை உருவாக்கலாம். இதற்கு நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை தைராய்டு உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது ஆரோக்கியமான குடலைப் பராமரிக்கிறது. மேலும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கிறது.
இந்த வகை அன்றாட பழக்க வழக்கங்களின் காரணமாக தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்படலாம். எனவே தைராய்டு சுரப்பியில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தால், உடனடியாக தைராய்டு செயல்பாட்டுக்கான பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Hyperthyroidism and Sex: ஹைப்பர் தைராய்டிசம் பாலியல் செயல்பாட்டை பாதிக்குமாம்! எப்படி தெரியுமா?
Image Source: Freepik