Everyday habits are fuelling inflammation in your body: பொதுவாக வீக்கம் என்பது தொற்று, காயம் அல்லது நச்சுகளுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பு முறையாகும். இது குணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. எனினும், நாள்பட்ட வீக்கத்தின் காரணமாக, நீடித்த நோயெதிர்ப்புக்கு எதிராக, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற நிலைமைகளுக்கு பங்களிக்கிறது. தொற்றுக்கள் மற்றும் நோய்கள் போன்றவற்றின் காரணமாக வீக்கம் ஏற்படுகிறது.
அதே சமயம், நாம் தினந்தோறும் செய்யும் சில பழக்க வழக்கங்களும் உடலை நிலையான அழற்சி நிலையில் வைத்திருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கலாம். இந்த மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் வீக்கத்தை அதிகரிப்பதுடன், நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, இந்த பழக்கங்களைக் கண்டறிந்து மாற்றுவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும். இதில் உடலில் ஏற்படும் வீக்கத்திற்குக் காரணமாக விளங்கும் சில அன்றாட பழக்கங்களின் பட்டியலைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Joint pain causes: உஷார்! இந்த உணவுகளை சாப்பிட்டா உங்களுக்கு மூட்டுவலி அதிகரிக்குமாம்
வீக்கத்தைத் தூண்டும் அன்றாடபழக்க வழக்கங்கள்
உடல் செயல்பாடு இல்லாமை
அன்றாட வாழ்வில் உடல் செயல்பாடுகள் மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். இந்த வாழ்க்கை முறையின் காரணமாக, C-ரியாக்டிவ் புரதம் (CRP) போன்ற வீக்கக் குறிப்பான்களை அதிகரிக்கிறது. இதுவே உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இதய நோய்களுக்குக் காரணமாகலாம்.
அதிக பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பது
சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள், துரித உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரையில் கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்தலாம். இவை உடலில் அழற்சி எதிர்வினைகளைத் தூண்டுகிறது. மேலும், அதிகப்படியான சர்க்கரை சைட்டோகைன்கள் என்ற அழற்சி புரதங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிப்பதன் மூலம் நீரிழிவு நோயை உண்டாக்கலாம்.
அதிக ஒமேகா-6 மற்றும் போதுமான ஒமேகா-3 இல்லாமல் இருப்பது
பொதுவாக வறுத்த உணவுகள், தாவர எண்ணெய்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளில் அதிகளவிலான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். ஆனால், இதை அதிகளவு உட்கொள்வதால் உடலில் வீக்கம் அதிகரிக்கலாம். அதே சமயம், மீன், ஆளி விதைகள் மற்றும் வால்நட்ஸில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே அதிகளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் எடுத்துக் கொள்வதும், போதுமான அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இல்லாமல் இருப்பதும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
சிகரெட் புகை அழற்சி எதிர்ப்பு வினைகளைத் தூண்டக்கூடிய நச்சுக்களை அறிமுகப்படுத்துகிறது. இதுவே இதய நோய், நுரையீரல் நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். சிகரெட் புகையைத் தவிர, காற்று மாசுபாடு மற்றும் வீட்டுப் பொருட்களில் உள்ள ரசாயனங்களும் வீக்கத்தை ஏற்படும் காரணிகளாகும். மேலும், அதிகளவு மது அருந்துவது குடல் ஊடுருவலை அதிகரிக்கிறது. இந்த நச்சுக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து வீக்கத்தைத் தூண்டுகிறது. நாள்பட்ட இந்த பழக்கம் கல்லீரல் செயல்பாட்டை பாதிப்பதுடன் வீக்கத்தை மோசமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Inflammation Causes: குளிர்காலத்தில் வீக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களும், அதைத் தடுக்கும் முறைகளும்
மோசமான தூக்கம்
தூக்கமின்மை அல்லது ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலில் வீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் இவை அனைத்துமே அழற்சி எதிர்வினைகளை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. இவ்வாறு தூக்கமின்மை காரணமாக அழற்சி குறிப்பான்கள் எழுப்பப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையலாம். இதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் நல்ல இரவு தூக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்டம்
வீக்கத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுவதும் அடங்கும். ஏனெனில், நீடித்த மன அழுத்தம் உடலில் கார்டிசோலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் உற்பத்தியை தொடர்ந்து உயர்த்தும் போது உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், இது இதய நோய், மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற நிலைமைகளை உண்டாக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?
Image Source: Freepik