Fri Sep 11, 2026 | 11:15 PM IST

Expert

தைராய்டை ரிவர்ஸ் செய்ய நீங்க காலையில் குடிக்க வேண்டிய மூன்று பானங்கள்..

தைராய்டை மாற்றியமைக்க அன்றாட உணவில் சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஹைப்போதைராய்டிசத்தை மாற்றியமைக்கவும் உதவும் மூன்று பானங்கள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், இன்றைய பிஸியான காலகட்டத்தில் தைராய்டு பிரச்சினைகள் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டன. ஆனால் இது கடுமையான பிரச்சனையாக மாறிவிட்டது. பொதுவாக,தைராய்டு பிரச்சினைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் வாழ்க்கை முறையையும் பாதிக்கக்கூடும்.

தைராய்டு சுரப்பியானது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனினும், எந்த காரணத்திற்காகவும் தைராய்டு உற்பத்தி அதிகரிக்கும்போது அல்லது குறையும் போது, அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தைராய்டு நோயாளிகள் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க தங்கள் உணவை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், இவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

இதில் தைராய்டு நோயாளிகள் தைராய்டை மாற்றியமைப்பதற்கு காலையில் செய்ய வேண்டிய சில பழக்க வழக்கங்கள் குறித்து ஹார்மோன் மற்றும் குடல் சுகாதார பயிற்சியாளரும், உணவியல் நிபுணருமான மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: ஹைப்போ தைராய்டிசத்தை ரிவர்ஸ் செய்ய டாப் 7 சிறந்த வழிகள் இதோ.. நிபுணர் தரும் டிப்ஸ்

தைராய்டு ரிவர்ஸ் செய்ய உதவும் வழிகள்

தைராய்டு பிரச்சனையால் இன்று பலரும் பாதிக்கப்பட்டிருப்பினும், தைராய்டை எளிதாக மாற்றியமைக்க முடியும். இதில் தைராய்டை ரிவர்ஸ் செய்ய உதவும் காலை பழக்கங்கள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ள ஹைப்போ தைராய்டிசம் நிவாரணத்திற்கான 3 படிகளைக் காணலாம்.

மேலும் அவர், “நீங்கள் பல ஆண்டுகளாக தைராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, உங்கள் இயற்கையான சமநிலையை பராமரிக்க விரும்பினால், இந்த 3-படி தைராய்டு குணப்படுத்தும் வழக்கத்தைச் செய்யத் தொடங்குங்கள்” என்று கூறினார்.

தைராய்டை ரிவர்ஸ் செய்ய உதவும் பானங்கள்

படி 1: கொத்தமல்லி + கலோஞ்சி விதை நீர்

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி விதைகள் - 1 தேக்கரண்டி
  • கலோஞ்சி (கருப்பு விதைகள்) - ½ தேக்கரண்டி
  • தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை

இந்தக் கலவையை தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ளலாம். பின்னர், இதை வெறும் வயிற்றில் சூடாக குடிக்க வேண்டும்.

நன்மைகள்

  • இந்த பானம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
  • இது நச்சு நீக்க உதவுகிறது
  • மேலும், தைராய்டு ஹார்மோன்களான T4+ T3 போன்ற ஹார்மோன் மாற்றத்தை ஆதரிக்கிறது
  • வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது

படி 2: மேஜிக்கல் முருங்கை நீர்

தேவையான பொருட்கள்

  • முருங்கை இலைப் பொடி (அல்லது 5-6 புதிய இலைகள்) - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை

இதில் முருங்கையை 5-10 நிமிடங்கள் வெந்நீரில் வேகவைத்துக் கொள்ளலாம். பின்னர் இதை காலையில் நடுப்பகுதியில் பருகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹைப்போ தைராய்டிசத்தை ரிவர்ஸ் செய்ய டாப் 7 சிறந்த வழிகள் இதோ.. நிபுணர் தரும் டிப்ஸ்

நன்மைகள்

  • இந்த பானம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
  • இது துத்தநாகம், செலினியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும்
  • இவை தைராய்டு சுரப்பி செயல்பாட்டை ஆதரிக்கிறது
  • ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைப்படுத்துகிறது

View this post on Instagram

A post shared by Dt Manpreet Kalra | Hormone and Gut Health Coach | (@dietitian_manpreet)

படி 3: ஊறவைத்த கொட்டைகள் மற்றும் விதை கலவை

தேவையான பொருட்கள்

  • பிரேசில் கொட்டைகள் - 1
  • சூரியகாந்தி விதைகள் - 1 தேக்கரண்டி
  • பூசணி விதைகள் - 1 தேக்கரண்டி
  • பாதாம் - 3
  • வால்நட்ஸ் - 1/2

(இரவு முழுவதும் ஊறவைக்கவும்)

செய்முறை

இந்த கலவைகள் அனைத்தையும் இரவு முழுவதும் ஊறவைத்து, பிறகு பானங்களுக்குப் பிறகு தினமும் காலையில் ஊறவைத்தவற்றை சாப்பிடலாம்.

நன்மைகள்

  • இது செலினியம், துத்தநாகம், ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும்.
  • இவை தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கிறது
  • இது சோர்வு மற்றும் மூளை மூடுபனியைக் குறைக்கிறது
  • தைராய்டு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டை ரிவர்ஸ் செய்ய உதவும் டாப் 7 மைக்ரோநியூட்ரியண்ட்ஸ்களும், நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளும்.. நிபுணர் பரிந்துரை

Image Source: Freepik

Read Next

மூட்டு வலியைப் போக்க உதவும் எப்சம் உப்பு.. இதை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 03, 2025 21:52 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content