Top Colon Cleanse Drinks to Boost Gut Health: உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறே, உடலுறுப்புகளில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றம், பாதுகாப்பு, ஊட்டச்சத்துக்கள் வழங்குதல் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகிறது. எனவே உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் குடல் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
குடல் ஆரோக்கியம் என்பது அனைத்து வயதினருக்குமே மிகவும் முக்கியமான ஒன்று. குடலில் ஏற்படும் பாதிப்புகள் உடலின் ஒட்டுமொத்த சமநிலையை பாதிக்கலாம். எனவே குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு முக்கியமானது என்றாலும், பெருங்குடல் சுத்தப்படுத்தும் பானங்களை எடுத்துக் கொள்வது கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. இது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை மெதுவாக ஆதரிக்கவும், வழக்கமான குடல் இயக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான குடல் சூழலை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை பழக்கங்கள்..
பெருங்குடல் ஆரோக்கியம்
பெருங்குடலை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இவை வழக்கமான குடல் இயக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான குடல் சூழலை ஊக்குவிக்கிறது. இது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிக்கிறது. இந்த பானங்களில் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மூலிகைகள், நார்ச்சத்துக்கள், புரோபயாடிக்குகள் உள்ளது. இவை குடலியக்கத்தை ஊக்குவித்து, செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருங்குடலை சுத்தப்படுத்தும் பானங்கள்
கற்றாழை சாறு
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்களின் காரணமாக அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது செரிமான அசௌகரியத்தை போக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆய்வு ஒன்றில், கற்றாழையை நேரடியாகவோ அல்லது எலுமிச்சைச் சாறு போன்ற வேறு சில பொருள்கள் கலந்து எடுத்துக் கொள்வது நன்மை தருவதாகக் கூறப்படுகிறது. இந்த சாறு தயார் செய்வதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொள்ளலாம்.
சியா விதைகள்
இது நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். சியா விதைகளில் வைட்டமின் சி, கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆய்வு ஒன்றில் சியா விதைகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விதைகளில் மலமிளக்கி பண்புகள் உள்ளது. இந்த சியா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கலாம் அல்லது சாறுகள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானங்கள்..
புரோபயாடிக் உணவுகள்
பெருங்குடல் சுத்திகரிப்புக்கு புரோபயாடிக்குகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அவ்வாறே புரோபயாடிக் நிறைந்த சுத்திகரிப்புப் பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் குடல் நுண்ணுயிரிக்கு சமநிலையை மீட்டெடுக்க உதவக் கூடிய குடல் நட்பு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குடல் அழற்சி மற்றும் பிற பெருங்குடல் அல்லது அமைப்பு சார்ந்த நோய்களின் தோற்றம் அல்லது தடுப்பு போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதன் படி, தாவர அடிப்படையிலான பாலை புளிக்கவைப்பதன் மூலம் புரோபயாடிக் பானங்களை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
எலுமிச்சை தண்ணீர்
பெருங்குடலை சுத்தப்படுத்துவதில் இது எளிய மற்றும் பயனுள்ள தேர்வாகக் கருதப்படுகிறது. எலுமிச்சை நீர் பானத்தை அருந்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்ல குடலியக்கங்களை ஆதரிக்கிறது. இதற்கு புதிய எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து, சுவைக்காக ஒரு சிட்டிகை உப்பு அல்லது தேன் சேர்த்து தயார் செய்யலாம்.
வெள்ளரி புதினா நீர்
இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அள்ளித்தரக்கூடியதாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பெருங்குடலைச் சுத்தப்படுத்தக்கூடிய பானமாகும். இதில் வெள்ளரிக்காய் நல்ல நீரேற்றத்தை அளிப்பதுடன், சில நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், புதினா செரிமான அமைப்பை ஆற்றவும், வீக்கம் மற்றும் வாயு போன்ற அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது. ஒரு கிளாஸ் நீரில் வெள்ளரிக்காய் மற்றும் புதிய புதினா இலைகளை நறுக்கி சேர்த்து இந்த நீரைத் தயார் செய்து அருந்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Gut Health Drinks: குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் சூப்பர் பானங்கள்
Image Source: Freepik