மக்கள் சந்திக்கு ம்தீவிர பிரச்சனைகளில் ஒன்றாக தைராய்டு மாறி வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமானோர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்படும் சதவீதம் 10 மடங்கு அதிகம். தைராய்டு ஹார்மோன் சரியாக வெளியிடப்படும்போது, உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சரியாக வேலை செய்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடு நன்றாக இருக்கும். அந்த ஹார்மோனின் வெளியீட்டில் சமநிலை இல்லாவிட்டால், பிரச்சனைகள் ஏற்படும்.
தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட சிறந்த வழிகள்
தைராய்டு பிரச்சனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. தைராய்டு சுரப்பி அதிகமாகச் செயல்படுவதை ஹைப்பர் தைராய்டிசம் என கூறுகின்றனர். இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக வெளியிடுவதால் ஏற்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்

இது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி செயலிழந்தால் ஏற்படும் சிக்கல் ஆகும். தைராய்டை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படியான உணவு வகைகளை பார்க்கலாம்.
இதையும் படிங்க: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும். பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் தைராய்டு பிரச்சனை அளவை குறைக்க உதவும். தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினசரி பூசணி விதைகள் சாப்பிட்டால் ஏணைய நன்மைகள் கிடைக்கும். இது மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் தாமிரம் அதிகம் உள்ளது. இது தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கால்சியம் அளவைக் கட்டுப்படுத்துகிறது, கறிவேப்பிலையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. முடி உதிர்தல், பசி மற்றும் பலவீனம் போன்ற தைராய்டு அறிகுறிகளை இவை தீர்க்கின்றன. கறிவேப்பிலையில் டானின்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன.
சப்ஜா விதைகள்
கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்க பலரும் சப்ஜா விதைகள் எடுத்துக் கொள்வார்கள். சப்ஜா விதைகள் தைராய்டை கட்டுக்குள் வைக்க உதவும். சப்ஜா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. சப்ஜாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது..உங்களை நிறைவாக வைத்திருக்கும். சப்ஜா விதைகளில் உள்ள பொட்டாசியம், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம் போன்ற தாதுக்கள் தைராய்டு அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
தயிர்
தயிர் அயோடினின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஒரு புரோபயாடிக் உணவு ஆகும். தைராய்டு பிரச்சினைகள் ஆட்டோ இம்யூன் நோய்களால் ஏற்படுகின்றன. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு தயிர் பெருமளவு உதவும்.
மாதுளை
மாதுளையில் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன, இது உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது, இதனால் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படும்.
இதையும் படிங்க: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
தைராய்டு பிரச்சனைகளை குறைத்த இந்த உணவுகள் உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகவதே சிறந்த முடிவாகும்.
image source: freepik