காலை எழுந்ததும் பலரும் பல வகையான உணவுகளைக் கட்டுபாடின்றி சாப்பிடுவார்கள். ஆனால் சில உணவுகளைக் காலைச் சாப்பிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரும் என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சில உணவுகளைக் காலைச் சாப்பிட்டால் அன்றை நாள்தொடங்கி பல விளைவைச் சந்திக்க வைக்கும்.
இந்தப் பதிவை முழுமையாகப் படித்த இதில் குறிப்பிட்டுள்ள உணவுகளிடமிருந்து விலகி இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
காபி, டீ
பலர் காலையை சூடான காபி மற்றும் டீயுடன் தொடங்குகிறார்கள். குடிக்கும் போது நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.. ஆனால் அதன் பிறகு பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பதால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நீரழிவு பிரச்னையும் ஏற்படுகிறது. இவற்றுக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை காலையில் எடுத்துக் கொள்ளவும். அதன்பின் டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் வராது.
குளிர் பானங்கள்
குளிர் பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவற்றை உட்கொள்வதால் குமட்டல், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இவற்றிடம் இருந்து தள்ளி இருப்பது மிக நல்லது. பொதுவாகவே குளிர் பானங்களை காலையில் யாரும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஐஸ் டீ, கோல்ட் காபி
பலர் காலை எழுந்ததும் ஐஸ் டீ மற்றும் கோல்ட் காபியை குடிப்பார்கள். காலை எழுந்ததும் ரிலாக்சேஷன் என நினைத்து ஐஸ் டீ, கோல்ட் காபியை குடிப்பார்கள். வெறும் வயிற்றில் இதை உட்கொண்டால் வயிற்றில் உள்ள சளி சவ்வை சேதப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை மெதுவாக்குகிறது.
பச்சை காய்கறிகள்
பலர் பச்சை காய்கறிகளுடன் சாலட் சாப்பிடுகிறார்கள். இதனால் எடை குறையும். ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான அமைப்பில் குழப்பம் ஏற்பட்டு, வயிற்றுவலி வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பச்சை காய்கறிகள் சாப்பிடுபவர்கள் அந்தளவிற்கு உடற்பயிற்சி செய்வார்கள், சாப்பிடும் காய்கறிகள் செரிமானமாவதற்கு.
காரமான உணவு
சிலர் காலையில் காரமான உணவுகளை சாப்பிடுவார்கள். இது நல்லதல்ல. பொதுவாக இது சாதாரண நேரங்களில் நன்றாக இருக்காது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டு அமிலத்தன்மையை உண்டாக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் அதிக அமிலம் வெளியேறும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு கனமாக இருக்கும். பொதுவாக இவை நல்லவை. ஆனால் வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
காலையில் இந்த உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதுபோன்ற முறைகளை கையாண்டு உடலில் ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik