Juices for platelets: டெங்குவால் குறையும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க

  • SHARE
  • FOLLOW
Juices for platelets: டெங்குவால் குறையும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க

உடலில் பிளேட்லெட்டுகளின் பங்கு

பொதுவாக இரத்தம் உறைதல் செயல்பாட்டில் பிளேட்லெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது, உடலில் உட்புகும் வைரஸ் ஆனது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது பிளேட்லெட்டுகளை அழிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்த குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை சில ஆரோக்கியமான பானங்களின் மூலம் மீட்டெடுக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: உடலின் இரத்த அளவை அதிகரிக்க உதவும் ஆகச் சிறந்த உணவுகள்!

பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பானங்கள் (Juices to boost platelet count)

இயற்கையாகவே பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்.

பீட்ரூட் சாறு

உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த சக்திவாய்ந்த பானமாக பீட்ரூட் சாறு அமைகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பீட்டாலைன்கள் உடலில் சேதமடைந்த இரத்த அணுக்களை சரிசெய்யவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே பீட்ரூட் ஜூஸ் அருந்துவதன் மூலம் ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சலில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க உதவுகிறது. டெங்கு மீட்சியின் போது நாள்தோறும் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு அருந்துவது பிளேட்லெட்டுகளை மீட்டெடுக்க உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

மாதுளை சாறு

மாதுளை இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சிறந்த பழமாகும். இரத்த அணுக்களை பராமரிக்க இந்த இரண்டு காரணிகளுமே அவசியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மாதுளை சாறு அருந்துவது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், டெங்குவின் பொதுவான அறிகுறியான சோர்வை எதிர்த்துப் போராடவும், உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளைச் சாற்றை அருந்தலாம்.

கிலோய் ஜூஸ்

குடுச்சி என்றழைக்கப்படும் கிலோய் பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. குறிப்பாக, கிலோய் சாறு அருந்துவது பிளேட்லெட் அளவை அதிகப்படுத்துவதுடன், டெங்கு வைரஸுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. எனவே டெங்கு காய்ச்சலின் போது கிலோய் சாற்றைத் தவறாமல் உட்கொள்வது பிளேட்லெட் அளவை மீட்டெடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?

பப்பாளி இலைச்சாறு

டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் சிறந்த தீர்வுகளில் ஒன்று பப்பாளி இலைச்சாறு அருந்துவதாகும். இதற்கு பப்பாளி இலைகளில் பப்பேன் போன்ற சக்திவாய்ந்த சேர்மங்கள் இருப்பதே முக்கிய காரணமாகும். இது உடலில் பிளேட்லெட் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த இலை சாறுகள் உடலில் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும் இதன் வைரஸ் தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பிளேட்லெட் அளவை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது. டெங்குவின் போது புதிய பப்பாளி இலைகளை நசுக்கி சாறு தயாரித்து ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு தேக்கரண்டி குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கோதுமைப் புல் சாறு

கோதுமைப் புல் அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்பட்ட சூப்பர் உணவு ஆகும். இதில் நிறைந்துள்ள அதிகளவிலான குளோரோபில் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது பிளேட்லெட்டுகள் மற்றும் இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது தவிர, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் கோதுமைப் புல் சாறு உதவுகிறது. தினமும் 30-50 மில்லி கோதுமைப் புல் சாறு அருந்துவது பிளேட்லெட் மீட்புக்கு வழிவகுப்பதுடன், விரைவான மீட்புக்கு உதவுகிறது.

இவ்வாறு ஆரோக்கியமான பானங்களை உட்கொள்வதன் மூலம் டெங்குவின் போது குறையும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மேலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Food for Increase Platelets: பிளேட்லெட் குறைந்துவிட்டதா.. இதையெல்லாம் சாப்பிடுங்கள்!

Image Source: Freepik

Read Next

Bitter Gourd: பாகற்காயின் முழுமையான ஆரோக்கிய பலனை பெற இப்படி சாப்பிடுங்க..!

Disclaimer