Herbs To Increase Platelet Count: பருவகால மாற்றத்திற்கு ஏற்ப பலரும் பல விதமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்க்களில் டெங்கு, மலேரியா போன்ற தீவிர நோய்களும் அடங்கும். இந்த வகை நோய் பரவலால் உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அடிக்கடி குறையலாம். இவ்வாறு இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருந்தால், நோயாளி இறப்பதற்கான சூழ்நிலை ஏற்படலாம். எனவே நோயாளி குறைந்த அளவிலான பிளேட்லெட் எண்ணிக்கை கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு பிளேட்லெட் மாற்றங்களைப் பெற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பிளேட்லெட்டுகள் உடலின் சிறிய இரத்த அணுக்கள் ஆகும். இவற்றின் வேலை இரத்தம் உறைதல் மற்றும் உடலை சரியாக செயல்பட வைப்பதாகும். பிளேட்லெட் எண்ணிக்கைக் குறையும் போது பதற்றம் அடைவர். ஆனால் இவ்வாறு செய்யாமல் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் பிளேட்லெட்டுகளை அதிகரிக்கலாம். இதில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சில ஹெர்பல் இலைகள் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.
பிளேட்லெட் எண்ணிக்கை
இயற்கையான வழியில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மூலிகை மற்றும் இயற்கைப் பொருள்களை பயன்படுத்தலாம். இது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின், ஆயுர்வேத இலைகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, ஆரோக்கியமான நபரின் உடலில் பிளேட்லெட்டுகளின் அளவு 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்கும்.
இதில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 50,000-ற்குக் கீழ் குறையும் போது அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இதில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேதாச்சார்யா டாக்டர் எஸ்.கே.பாண்டே அவர்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை, கற்றாழை, கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலம் எனக் கூறியுள்ளார்.
பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுர்வேத மூலிகைகளைக் காணலாம்.
பப்பாளி இலை சாறு
உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்தால், பப்பாளி இலைகளை உட்கொள்ளலாம். இதில் உள்ள என்சைம்களே உடலில் பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த இலைகள் பிளேட்லெட் அதிகரிக்க உதவும் மருந்துகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. பப்பாளி இலை சாற்றை ஒரு நாளைக்கு இரு முறை குடித்து வந்தால் இரத்த தட்டுகள் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Rock Sugar Benefits: எடை குறைப்பு முதல் கண்பார்வை நன்மை வரை. இந்த ஒரு பொருள் போதும்
கிலோய் இலை சாறு
ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள மருந்துகளில் கிலோய் இலையும் ஒன்று. இதன் பண்புகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குளிர் மற்றும் வைரஸ் காய்ச்சலிலும் இதன் நுகர்வு நன்மை பயக்கும். உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு நாளைக்கு இரு முறை அரை கப் கிலோய் சாறு குடிப்பது நன்மை தரும்.
அலோவேரா சாறு
கற்றாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் பல்வேறு தீவிர பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இந்த சாற்றை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
இது தவிர, உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருப்பின், உணவு முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம். பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இதில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதை உட்கொள்ளும் முன், அதன் அளவு மற்றும் முறையைக் குறித்து மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Black Raisin Benefits: சரும பிரச்சனை முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை. பெண்களுக்கு இது ஒன்னு போதும்
Image Source: Freepik