Dengue Recovery Food: டெங்குவில் இருந்து விடபட இந்த உணவை சாப்பிடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Dengue Recovery Food: டெங்குவில் இருந்து விடபட இந்த உணவை சாப்பிடுங்கள்!


Dengue Recovery Food: மழைக்காலம் என்பது எவ்வளவு இனிமையானதோ, அவ்வளது ஆபத்தானதும் கூட. மழையால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் மழை நீர் தேங்குவதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். இதன்காரணமாக தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதில் இருந்து மீளுவது என்பது மிக முக்கியம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மீள்வதில் மருந்துகளுடன் உங்கள் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், தவறான உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் டெங்கு காய்ச்சலில் விரைவாக குணமடைய முடியும்.

இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கோ டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், குணமடையும் வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டெங்கு ஏற்பட்டால் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்த தகவலை பார்க்கலாம்.

பப்பாளி இலைச்சாறு

பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலைக் குறைக்கும். இந்த சாறு காய்ச்சலைக் குறைக்கும். பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புதிய பப்பாளி இலைகளை எடுத்து சிறிது சாறு எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து இந்த இலைகளை ஒரு பிளெண்டரில் வைக்கவும். இந்த சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய்கறி சாறு

புதிய காய்கறி சாற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களுக்கு விருப்பமான காய்கறிகளுடன் இந்த ஜூஸ் செய்யலாம். சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் வைட்டமின் சி சத்தும் அதிகரிக்கிறது. சுவையும் மேம்படும்.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இலாச்சி, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நல்ல மூலிகை தேநீர் தயாரிக்கலாம். இனிமையான விளைவைப் பெறலாம். மூலிகை தேநீரின் புத்துணர்ச்சியூட்டும் சுவையும் உங்கள் மனதை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

வேப்பம்பூ

வேப்பம் பூவில் மருத்துவ குணங்கள் அதிகம். டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பக்குள சாறு வைரஸின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது.

மஞ்சள்

மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் பால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது விரைவாக மீண்டு வர உதவுகிறது. உங்களுக்கு மஞ்சள் பால் பிடிக்கவில்லை என்றால், மஞ்சள் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது பிளேட்லெட்டுகளை உருவாக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் விளைவைக் குறைக்கும்.

சிக்கன் சூப்

சளி மற்றும் காய்ச்சலைக் குறைக்க சிக்கன் சூப் உதவுகிறது என்பதை நிரூபிக்கும் பல நிகழ்வுகள் உள்ளன. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இருகிய சளியை குறைக்க உதவும்.

டெங்கு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

டெங்கு உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகளை உட்கொண்டால் டெங்கு அறிகுறிகளை மோசமாக்க வாய்ப்புகள் உண்டு. வறுத்த உணவுகள், காஃபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் உள்ளிட்டவைகளை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

மருந்துகளை உட்கொள்ளும் போது உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் விரைவாக மீண்டு வரலாம். இவை அனைத்தும் டெங்குவில் இருந்து நம்மை மீட்க உதவும் என்றாலும் இதுபோன்ற பாதிப்புகள் வரும்போது மருத்துவரை அணுகவதே சிறந்த முடிவாகும்.

image source: freepik

Read Next

Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..

Disclaimer

குறிச்சொற்கள்