Ear Infections: காதுகள் நம் உடலின் முக்கிய அங்கமாகும். கேட்கும் திறனை முழுமையாக பெற காதுகளை சரியாக பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். நம் காதுகளும் உடலைப் போன்ற பல நேரங்களில் நோய் வாய்ப்படும் அபாயம் உள்ளது. முகத்தில் உள்ள சருமத்தையும், கண்களையும், தினசரி பல் துலக்கி வாயையும் பராமரிக்கும் அளவு காதுகளை பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை.
வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் காது தொற்று ஏற்படுகிறது. காது நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் காதின் நடுப்பகுதியில் அதாவது நடுத்தர காதில் ஏற்படும். உங்களுக்கு சளி அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனை இருந்தால், காது தொற்று ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும்.
காது வலி நேரத்தில் என்ன செய்யக்கூடாது?

காதுகளில் அழுக்கு சேருவதாலும் காதில் தொற்று ஏற்படலாம். காது தொற்று ஏற்பட்டால், காதுக்குள் தொற்று பரவாமல் இருக்க, சிலவற்றை தவிர்க்க வேண்டும். எனவே, காது தொற்று ஏற்பட்டால் நீங்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.
- தண்ணீரை தவிர்க்க வேண்டும்
காதில் தொற்று ஏற்பட்டால் அதில் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீருடன் தொடர்பு கொள்வதால் தொற்று அதிகரிக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டால் உங்கள் காதுகளை முடிந்தவரை உலர வைக்க வேண்டும். காது எவ்வளவு வறண்டதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு. குளிக்கும் போது, சோப்பு நீர் காதுகளுக்கு வராமல் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
- இயர் பட்ஸ் பயன்படுத்தவதில் கவனம் தேவை
உங்களுக்கு காது தொற்று இருந்தால், பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதை பயன்படுத்தும் போது சற்று ஆறுதலாக இருந்தாலும் இது தொற்று பாதிப்பை அதிகரிக்கும். காதில் எதையும் தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது. இது காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தொற்றுநோய்களின் போது காதுகள் காற்று மாசுபாட்டிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
- மருத்துவ பரிசோதனையை தவிர்க்கக் கூடாது
காதில் அரிப்பு, வலி, எரிச்சல் போன்ற ஏதேனும் உணர்வு தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவர் பரிந்துரையை பெறுவது அவசியம். முகங்களில் உள்ள பிற பாகங்கள் போல் காதும் மிக உணர்திறன் வாய்ந்த விஷயமாகும். மக்கள் காது விஷயத்தில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை. காதில் ஏதேனும் தீவிரமான உணர்வை சந்திக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
- காதுக்குள் எண்ணெய் தடவுவது
காது தொற்று ஏற்பட்டால் எண்ணெய் வைக்கும் பழக்கத்தை பலரும் செய்கிறார்கள். இதனால், காதில் அழுக்கு படிந்து, தொற்று விரைவில் குணமாகாது. எண்ணெய் வைப்பதால் காதில் ஈரப்பதம் அதிகரித்து, தொற்று தொடர்ந்து இருக்கும், எனவே மருத்துவரிடம் ஆலோசிக்காமல் காதுக்கு எந்த தனிப்பட்ட வைத்தியத்தையும் செய்ய வேண்டாம்.
- ஆரோக்கியமான உணவுகள் அவசியம்
காது தொற்று ஏற்பட்டால், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் தொற்றுநோயை விரைவில் குணப்படுத்த முடியும். காதில் பாக்டீரியா தொற்று இருந்தால், வைட்டமின் சி உள்ளவற்றை உட்கொள்ளுங்கள். முடிந்தவரை வெந்நீர் குடியுங்கள்.
உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.
Image Source: FreePik