Doctor Verified

Ear Pimple Causes: இந்த காரணத்துக்காக காதில் பருக்கள் வரலாம். எப்படி குணப்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Ear Pimple Causes: இந்த காரணத்துக்காக காதில் பருக்கள் வரலாம். எப்படி குணப்படுத்துவது?

பருக்கள் எந்த பகுதியிலும் ஏற்படலாம். அந்த வகையில் காதுகளில் பருக்கள் ஏற்படலாம். ஆம், காதுகளில் பருக்கள் ஏற்பட்டு வலி ஏற்படலாம். இந்த வலி அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதில், காதுகளில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறை குறித்து லக்னோவில் உள்ள ஓம் ஸ்கின் கிளினிக்கின் மூத்த ஆலோசகர் தோல் மருத்துவர் தேவேஷ் மிஸ்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க

காதில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • காதுகளைச் சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், சருமத்தில் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டு காதுகளுக்குள் பருக்கள் ஏற்படலாம்.
  • காதுகளைச் சுற்றி மண், தூசி மற்றும் இறந்த சரும செல்கள் படிவது பருக்களை உண்டாக்கலாம்.
  • சரும சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, துளைகள் தடுக்கப்படுகிறது. இதனால் முகம் மற்றும் காதுகள் உட்பட உடலின் மற்ற பகுதிகளில் பருக்கள் ஏற்படலாம்.
  • ஹார்மோன் மாற்றங்களால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகத் தொடங்கலாம். இதனால் காதுகள், கழுத்து மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் பருக்கள் ஏற்படுகிறது.
  • சிலருக்குக் காதில் நகைகள் அணிவதால் அலர்ஜி ஏற்பட்டு பருக்கள் தோன்றலாம்.
  • அழுக்கு படிந்த ஹெட்ஃபோன்களை அணிவதன் மூலமும், காதுகளுக்குள் பாக்டீரியாக்கள் நுழைந்து பருக்களை ஏற்படுத்துகிறது.
  • அதிக வியர்வை காரணமாக, காதுகளின் துளைகள் அடைத்து பருக்கள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Watermelon Seeds Benefits: முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் தர்பூசணி விதை. இப்படி யூஸ் பண்ணுங்க

காது பருக்களுக்கான சிகிச்சை முறைகள்

காதில் உள்ள பருக்களை வீட்டு வைத்தியங்கள் உதவியுடன் குணப்படுத்தலாம். இதனைக் குணப்படுத்தாவிடில் சரும தொற்றுநோயை அதிகரிக்கலாம். காது பருக்களுக்கான சிகிச்சை முறைகள் சிலவற்றைக் காணலாம்.

  • காதில் பருக்கள் இருப்பின், ஐஸ்கட்டி தடவலாம். ஆனால் காதுக்குள் தண்ணீர் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • காது பருக்களுக்கு பாக்டீரியா எதிர்ப்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • காதில் பருக்கள் இருப்பின், காதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை சூடான ஃபோமெண்டேஷன் உதவியுடன் பருக்களை குணப்படுத்தலாம்.
  • அறுவை சிகிச்சையின் உதவியுடன் காதில் குவிந்திருக்கும் சீழ் அகற்றலாம். இதன் மூலம் பருவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் காதில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Sunscreen: வெயில் ஸ்டார்ட் ஆயிடுச்சி! வீட்டிலேயே சன்ஸ்கிரீன் லோஷனை இப்படி தயார் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Watermelon Seeds Benefits: முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் தர்பூசணி விதை. இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer