What not to Eat to Manage PCOD Symptoms: பிசிஓடி அதாவது பாலிசிஸ்டிக் ஓவரி நோய் இன்றைய காலத்தில் பெண்களிடம் அதிக காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று. இந்த பிரச்சனையில், கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் அல்லது கட்டிகள் உருவாகின்றன. இதன் காரணமாக, பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. ஏனெனில், இந்த கட்டிகள் மாதவிடாய் மற்றும் கர்ப்பம் இரண்டையும் பாதிக்கின்றன.
PCOD-யின் மற்ற அறிகுறிகளில் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், தூங்குவதில் சிரமம், சோர்வாக உணர்தல், தேவையற்ற முக முடி மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஆகியவை அடங்கும். சில பெண்களுக்கு PCOD இருந்தாலும் உடல் எடை அதிகரிக்காது. இது லீன் பிசிஓடி என அழைக்கப்படும்.
இந்த பதிவும் உதவலாம் : PCOS Exercise: பிசிஓஎஸ் இருக்குன்னு கவலையா? இத பண்ணுங்க போதும்!
PCOD இன் அறிகுறிகளை சரிசெய்ய சரியான உணவு மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது மற்றும் எழுந்திருப்பதும் முக்கியம். PCOD-யில், காலை உணவாக சிலவற்றை ஆரோக்கியமானதாக கருதி சாப்பிடுகிறீர்கள், ஆனால் உண்மையில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரட் டோஸ்டுடன் டீ/காஃபி
பெரும்பாலான வீடுகளில், காலை உணவாக டீ மற்றும் காபியுடன் பிரட் டோஸ்ட்டை சாப்பிடுவார்கள். உங்களுக்கு PCOD இருந்தால், அதை காலை உணவாக சாப்பிடக் கூடாது.
ஏனென்றால், இதில் அதிக அளவில் காஃபின் உள்ளது. இதன் காரணமாக புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைகிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது மற்றும் PCOD இன் அறிகுறிகள் அதிகமாகத் தெரியும்.
இந்த பதிவும் உதவலாம் : PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்
பதப்படுத்தப்பட்ட தானியங்கள்
நீங்கள் காலை உணவில் பாலுடன் தானியங்களை சேர்த்து சாப்பிடுவது, ஆரோக்கியமான விருப்பமாக கருதினால், PCOD அல்லது PCOS உள்ளவர்களுக்கு நல்லது அல்ல.
இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது. இதன் காரணமாக, டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிக்கப்பட்டு PCOD-யின் அறிகுறிகள் அதிகரிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம் : Signs Of PCOS: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்! இது pcos-ன் அறிகுறிகள்
பழச்சாறு
பழச்சாற்றில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. காலை உணவில் பழச்சாறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். புரோட்டீன் நிறைந்த காலை உணவுடன் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம்.
Pic Courtesy: Freepik