PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்

  • SHARE
  • FOLLOW
PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்

PCOS பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள்: இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழிலில், நம் உடல் ஆரோக்கியத்தை சரியாகப் பராமரிக்க முடிவதில்லை.இதனால் பல நேரங்களில் பல நோய்களுக்கு ஆளாகிறோம். மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுவது மற்றும் குறைந்த உடல் செயல்பாடுகளால், பல நேரங்களில் பெண்கள் PCOS அல்லது PCOD பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்து, பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் குறையும்போது, மாதவிடாய் தள்ளிப்போய் பல வகையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்த பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த பெண்கள் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.PCOS அல்லது PCOD பிரச்சனையைக் குறைக்க பதிவில் குறிப்பிட்டுள்ள இந்த 5 உணவுகளை சாப்பிடலாம். இந்த உணவுகள் PCOS பிரச்சனையைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த உணவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

PCOS பிரச்சனையைக் குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். பீன்ஸ், கேரட், பீட்ரூட், ஆரஞ்சு, ஆப்பிள் ஆகியவற்றை உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் PCOS பிரச்சனையைக் குறைப்பதோடு, செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

சியா விதைகள்

PCOS பிரச்சனையைக் குறைக்க, பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சியா விதைகளைச் சேர்த்து கொள்ள வேண்டும்.இதில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.பெண்கள் தங்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் சியா விதைகளை உட்கொள்ளலாம்.

கேரட்

கேரட் உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிட்டால் PCOS பிரச்சனை குறைவதுடன் கண் பார்வையும் மேம்படும். கேரட்டில் கால்சியம், இரும்புச்சத்து, பயோட்டின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கருமுட்டை வெளியீடு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. PCOS அல்லது PCOD பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.

பாதம் பருப்புகள்

பாதாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. PCOS அல்லது PCOD பிரச்சனை இருந்தால், பாதாம் பருப்பை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை உண்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும், அடிக்கடி பசி எடுக்காது. பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் சாப்பிடுவது எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மேலும், சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

இந்த உணவுகள் அனைத்தும் PCOS அல்லது PCOD பிரச்சனையைக் குறைக்க உதவுகின்றன. இருப்பினும், இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன், உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Images credit: freepik

Read Next

கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!

Disclaimer

குறிச்சொற்கள்