Best Exercise For PCOS: பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS) என்பது பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னை ஆகும். இது எதனால் ஏற்படுகிறது என்று காரணம் தெரியாவிட்டாலும், உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு PCOS ஏற்படுகிறது. PCOS உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இன்சுலின் தடை, இரத்த குழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
PCOS உள்ளவர்கள் சரியான உணவுமுறையுடன் உடற்பயிற்சி மேற்கொண்டால் 90 சதவீதம் வரை இந்த நோயை குறைக்க முடியும். அதனால் PCOS இருக்கிறது என்று கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை (PCOS Exercise) செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
முக்கிய கட்டுரைகள்
விரைவான நடைபயிற்சி

ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்களுக்கு விரைவான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நல்ல காலணிகளை அணிந்துக்கொண்டு, இயல்பான அடிகளை எடுத்து வைத்து நடக்கவும். இது முழு உடலுக்கும் இயக்கத்தை கொடுக்கிறது. நீங்கள் நடக்கும் போது தலையை நிமர்த்தி, மார்பை உயர்த்தி, வயிற்றை உள்ளிழுத்து, தோள்பட்டையை தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஜம்பிங் ஜேக்ஸ்
ஜம்பிங் ஜேக்ஸை தினமும் 20 முறை 2 செட்டாக எடுக்க வேண்டும். இதற்கு முதலில் நேராக நின்று உங்கள் கைகளை பக்கவாடில் சிறிது விரித்தவாறு வைத்துக்கொள்ளுங்கள். பின் பாதங்களை விரித்தவாறு குதிக்கவும். அப்போது உங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மீண்டும் முதல் படிக்கு திரும்ப வேண்டும். இதே போல் 20 முறை செய்யவும். நீங்கள் ஒவ்வெரு முறையும் குதிக்கும் போது, உங்கள் வயிற்றை முடிந்த அளவு உள்ளிழுக்கவும்.
ஸ்பாட் மார்ச்சிங்
தினமும் 10 முறை ஸ்பாட் மார்ச்சிங் செய்யவும். இதனை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். உங்கள் கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும். நீங்கள் வலது காலை உயர்த்தும் போது, இடது கையை கொண்டு வலது கால் தொடையை தொடவும். இடது காலை உயர்த்தும் போது, வலது கையை கொண்டு இடது கால் தொடையை தொடவும். இந்த முறையை தொடர்ந்து செய்யவும். இதனை செய்யும் போது மூச்சை சீராக விடவும். குறிப்பாக கைகளை இறுக்கமாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்குவாட்ஸ்

தினமும் 15 முறை 2 செட்டாக செய்யவும். இதற்கு உங்கள் கால்களை தோல்பட்டை அகலத்திற்கு விரித்துக்கொள்ளவும். உறுதிமொழு எடுப்பது போல் இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொள்ளவும். தற்போது சேர்ரில் உட்கார்ந்து எழுந்திருப்பது போல், உட்கார்ந்து எழவும். இதனை 15 முறை செய்யவும். இதனை செய்யும் போது மார்பை குறுக்காகவும், தசைகளை இறுக்கமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் PCOS-ஐ கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் இதை செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். அவர்கள் உங்களுக்கு தெளிவான விரிவுரையை கொடுக்க முடியும்.
Image Source: Freepik