How To Get Rid Of Hangover: ஹேங்ஓவர் என்பது அதிகப்படியாக மது அருந்திய பின் ஒருவர் சந்திக்கும் நிலை ஆகும். இதில் வயிற்றுப்போக்கு, சோர்வு, தலைவலி , குமட்டல் மற்றும் நடுக்கம் ஆகியவை அடங்கும்.
இதற்கு காரணம் ஆல்கஹால் அசெட்டால்டிஹைடாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது. இது அதிக அளவில் நச்சுத்தன்மையுடையது. தூக்கத்தின் போது குடிப்பழக்கம் மூளையின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. எனவே தூக்கமின்மையின் ஒரு வடிவமாக ஹேங்கொவர் ஏற்படலாம்.
இதில் இருந்து விடுபடுவதற்கு குடி பழக்கத்தை விடுவது ஒரு சிறந்த வழி. இருப்பினும் சிலர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். வாரத்திற்கு ஒரு முறையாவது மதுவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அத்தகையவர்களுக்கு ஹேங்ஓவரில் இருந்து வெளிவர சில குறிப்புகள் இங்கே.
ஹேங்ஓவரில் இருந்து விடுபட டிப்ஸ் (Tips For Hangover)
அதிக திரவம் எடுக்கவும்
ஆல்கஹால் அதிக சிறுநீரை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் உடல் டீஹைட்ரேட்டாக இருக்கும். ஏனெனில் இது சிறுநீரகங்களால் செய்யப்படும் சிறுநீரின் அளவைக் குறைக்கும் ஒரு ஹார்மோனான வாசோபிரசின் வெளியீட்டைத் தடுக்கிறது.
உங்கள் ஹேங்ஓவரில் வயிற்றுப்போக்கு, வியர்த்தல் அல்லது வாந்தி இருந்தால், நீங்கள் இன்னும் அதிகமாக நீரிழப்புடன் இருக்கலாம். இதில் இருந்து விடுபட திரவ உணவுகளை உட்கொள்ளவும். குறிப்பாக ஃப்ரூட் ஜூஸ் அல்லது தண்ணீர் அதிகம் குடிக்கவும்.
மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளவும்
குடிப்பழக்கம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். பலர் குடிக்கும்போது சாப்பிட மறந்துவிடுகிறார்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதனை கட்டுப்படுத்த மாவுச்சத்து நிறைந்த உணவை காலையில் எடுத்துக்கொள்ளவும். இதற்கு ஜூஸ் மற்றும் டோஸ்ட் உதவலாம்.
இதையும் படிங்க: Alcohol Side Effects: அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!
சில மதுபானங்களை தவிர்க்கவும்
ஓட்கா மற்றும் ஜின் போன்ற சாதாரண மதுபானங்கள். விஸ்கி, ரெட் ஒயின் மற்றும் டெக்யுலா போன்றவை ஹெவியான மதுபானங்கள். இந்த ஹெவியான மதுபானங்கள், ஹேங்ஓவருக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவற்றில் மெத்தனால் போன்ற இரசாயன கலவைகள் உள்ளன. இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை. எனவே அவை மோசமான ஹேங்ஓவரை ஏற்படுத்தும்.
வலி நிவாரணி
ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், தலைவலி மற்றும் ஒட்டுமொத்த வலி உணர்வுகளுக்கு உதவலாம். ஆனால் அசெட்டமினோஃபென் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இவை ஏற்கனவே மதுவால் எரிச்சலடைந்த வயிற்றை மேலும் எரிச்சலடையச் செய்யலாம். மேலும் இது கல்லீரலையும் பாதிக்கலாம். அதனால், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
காபி அல்லது டீ
காஃபினில் ஹேங்ஓவர் எதிர்ப்பு சக்திகள் ஏதும் இல்லை. ஆனால் அவற்றில் மனச்சோர்வை போக்கும் குணங்கள் உள்ளன. ஆகையால், ஹேங்ஓவரை போக்க காபி அல்லது டீயை குடிக்கவும்.
பின் குறிப்பு
நீங்கள் மது அருந்த விரும்பினால் நன்கு சாப்பிட்ட பின் குடிக்கவும். அப்போது தான் நீங்கள் அளவாக குடிப்பீர்கள். பெண்கள் ஒரு நாளைக்கு 1 கிளாஸ்க்கு அதிகமாகவும், ஆண்கள் ஒரு நாளைக்கு 2 கிளாஸ்க்கு அதிகமாகவும் மது எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆல்கஹால் கொண்ட பானங்களுக்கு இடையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது குறைந்த அளவு மது அருந்தவும், மது அருந்துவதால் ஏற்படும் நீர்ச்சத்து குறையவும் உதவும்.
Image Source: Freepik