$
அதிகபடியாக மது அருந்துவது, உங்கள் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். இதனால் நீங்கள் மதுவை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கவும். மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே காண்போம்.
கல்லீரலில் கொழுப்பு படியும்

மது அருந்துவது கல்லீரலை பாதிக்கும். அதிகப்படியான மது குடிப்பது, வளர்சிதை மாற்றத்தை கடினமாக்கும். மேலும் கல்லீரலில் கொழுப்பு படியும். இது கல்லீரல் தொடர்புடைய நோய்களை உண்டாக்கும்.
சீரற்ற செரிமானம்
மது அருந்துவது முதலில் உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும். உங்கள் குடல் இயக்கத்தில் அசௌகரியம் ஏற்படும். உங்களுக்கு செரிமானம் சீராக இருக்காது. இதனால் வயிற்றுப்போக்கு, வாயு, வயிறு வீக்கம், வயிற்றுப்புண் ஆகியவை ஏற்படும். மேலும் அதிகபடியான அமில சுரப்பு ஏற்படுவதால், வயிறு எரிச்சல் ஏற்படும்.
இதையும் படிங்க: Quit Drinking Alcohol: மது அருந்துவதை நிறத்த வேண்டுமா? இதை செய்து பாருங்கள்!
இதயத்தை பாதிக்கும்
மது அருந்துவதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் இரத்த நாளங்களில் உள்ள தசைகளை பாதிக்கும். இது இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எடை குறையும்

அதிகபடியாக மது அருந்துவது, பசியின்மையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலில் ஆற்றல் குறையும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உடலில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போகும்.
மூளையை பாதிக்கும்
அதிகபடியான மது அருந்துவது, மூளையில் உள்ள இரசாயனங்களை மந்தமாக்குகிறது. மது அதிகமாக உட்கொள்பவர்களுக்கு கவனம், மனநிலை போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். தொடர்சியாக மது அருந்துவது, மூளையின் தோற்றத்தை பாதிக்கலாம்.
மது அருந்துவது எப்போதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், மது அருந்துவதை கைவிடவும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை தேர்வு செய்யவும்.
Image source: Freepik