Eye Health Foods: ஷார்ப்பான கண்களுக்கு தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Eye Health Foods: ஷார்ப்பான கண்களுக்கு தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

கேரட்

கண் ஆரோக்கியத்திற்கு உரித்தான உணவுகளில் ஒன்று கேரட் ஆகும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நல்ல பார்வையை பராமரிக்க இன்றியமையாததாகும். இந்த பீட்டா கரோட்டீன் விழித்திரை மற்றும் கண்ணின் மற்ற பாகங்கள் சீராக செயல்பட உதவுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கண் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பீட்டா கரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயது தொடர்பாக ஏற்படும் மாகுலர் டிஜெனரேஷன் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eyesight Improve Foods: நல்ல தெளிவான, ஆரோக்கியமான கண்களைப் பெற உதவும் டாப் உணவுகள் என்னென்ன தெரியுமா?

உருளைக்கிழங்கு

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாக உருளைக்கிழங்கு அமைகிறது. இதில் வைட்டமின் ஈ ஆனது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் குறிப்பிட்ட படி, உருளைக்கிழங்கின் வைட்டமின் ஈ சத்துக்கள் மற்ற ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்ந்து மாகுலர் டிஜெனரேஷன் (AMT) மற்றும் கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

பாதாம்

கண்களின் ஆரோக்கியத்தில் பாதாம முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, பாதாம் வைட்டமின் ஈ இன் சிறந்த மூலமாகும். எனவே இவை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. நேஷனல் ஐ இன்ஸ்டிடியூட் நடத்திய வயது தொடர்பான கண் நோய் ஆய்வில் வைட்டமின் ஈ ஆனது மற்ற ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்ந்து கண் புரை மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் (AMT) அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கீரை

கீரையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கண்களை தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இவை கண்புரை மற்றும் AMD அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் இரண்டுமே பார்வை செயல்திறனை மேம்படுத்துவதுடன், கண் விழித்திரையில் ஏற்படும் சேதத்தைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுரிநெல்லிகள்

அவுரிநெல்லிகளில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கண்களில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அவுரிநெல்லிகளைப் பயன்படுத்துவது விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயது தொடர்பான கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Health Foods: பார்வை திறனை உணவு மூலம் மேம்படுத்த முடியுமா?

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் ஒரு தெளிவான கார்னியாவை பராமரிக்க உதவுகிறது. மேலும், இந்த வைட்டமின் சி சத்துக்கள் கண்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆய்வின் படி, வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் (AMT)-ஐத் தடுக்க உதவுகிறது.

மீன்

மீன்கள் கொழுப்பு நிறைந்தவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் கிளைகோமா மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் கண் விழித்திரை செல்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

முட்டைகள்

கீரை உணவுகளைப் போலவே முட்டையிலும் லுடீன், ஜீயாக்சாண்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இது தவிர வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்றவையும் முட்டையிலும் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே வயது தொடர்பான கண் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே முட்டையை உட்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு மற்றும் இன்னும் பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு சிறந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இந்த வைட்டமின் சி சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் மாகுலர் டிஜெனரேஷன் (AMT) மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதன் மூலம் கண்புரை அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Health: கண்பார்வை மங்கலா தெரியுதா? அப்போ முழு நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க!

Image Source: Freepik

Read Next

தொப்பை சட்டென்று குறைய இஞ்சி, ஆப்பிள் சிடர் வினிகர் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்