ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறை காரணமாக பலர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இப்போதெல்லாம் உலகம் "டிஜிட்டல் உலகம்" ஆகிவிட்டது. பெரும்பாலான வேலைகள் அமர்ந்த இடத்திலேயே செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொப்பையை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் சிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கும் பலருக்கு பலன் கிடைப்பதில்லை. தொப்பை மெழுகு போல் கறைய இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பெரிதளவு பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரில் தயாரிக்கப்பட்ட பானத்தை உட்கொண்டால், அது வீக்கம் மற்றும் தொப்பையைக் குறைக்க உதவும்.
இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்
இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பானம் தயாரிக்க தேவையான பொருட்கள் குறித்தும் இதன் செய்முறை குறித்தும் இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலம்
தண்ணீர் - 200 மிலி
செய்முறை
இந்த பானத்தை தயாரிக்க, ஒரு பெரிய கோப்பையில் 200 மில்லி தண்ணீரில் அரை அங்குல இஞ்சி சேர்த்து குலுக்கவும்.
இந்த கலவையில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். தொப்பை கொழுப்பு மற்றும் வீக்கம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும் பானம் தயார்.
இந்த பானத்தை தினமும் மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பானம் நன்மைகள்
ஆப்பிள் சிடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. தினமும் ஆப்பிள் சிடர் வினிகரை உட்கொள்வது வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து தொப்பையை அகற்ற உதவுகிறது.
இந்த பானத்தில் அதிக நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து உட்கொள்வது வயிற்றை நீண்ட காலத்திற்கு நிரம்பியதாக உணர வைக்கிறது, இது எடை இழப்பு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இஞ்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பானத்தை தினமும் உட்கொள்வது வயிற்று உப்புசம் மற்றும் வாயு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
Image Source: FreePik