How to Improve Eyesight: உங்கள் கண்பார்வை மங்கலாக இருக்கா? இதனை தெளிவுப்படுத்த வழிதேடுகிறீர்களா? இதனை உணவு மூலம் குணப்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், பார்வை திறனை மேம்படுத்த சில உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை என்னென்னெ என்று இங்கே காண்போம்.
சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள், ஒரு சிறந்த ஆக்ஸிஜநேற்றியாக திகழ்கிறது. இது கண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மேலும் இது நன் உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.
கீரை
பார்வை திறனை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று சிந்தனை எழும்போது, முதலில் நம் மனதில் உதிப்பது கீரைகள் தான். இவற்றில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டு லுடீன் உள்ளன. இது பார்வை திறனுக்கு முக்கியமான ஒன்று.
இதையும் படிங்க: Foods Improve Eyesight: உணவு மூலம் பார்வை திறனை மேம்படுத்த முடியுமா?
முட்டை
முட்டையில் உள்ள வைட்டமின் சி மற்றும் லுடீன் கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இவற்றின் ஊட்டச்சத்துகள் மாகுலர் சிதைவை தடுக்கிறது.
கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள லூடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் கண் பார்வையை ஆதரிக்க உதவும்.
மீன்
உங்கள் உணவில் ஒமேக கொழுப்பு நிறைந்த மீன்களை இணைப்பது, பார்வை திறனை மேம்படுத்த உதவும். இவை கண் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
மேற்கூறிய உணவுகள் அனைத்தும் உங்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும் என்றாலும், உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை மாற்றும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik