Ways To Use Karpooravalli Leaves For Cold: இன்று பலரும் பொதுவாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக சளி மற்றும் இருமல் ஏற்படுகிறது. சிலருக்கு சளி மற்றும் இருமல் குணமாக அதிக நேரம் அதாவது நீண்ட நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சிலருக்கு குறைவான நேரம் எடுத்துக் கொள்ளலாம். சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பலரும் நாடுவது ஆங்கில மருந்தே ஆகும். ஆனால், சில சமயங்களில் சிலருக்கு இந்த ஆங்கில மருந்தும் கேட்காமல் போகலாம்.
இதனைத் தவிர்க்க சில இயற்கையான வைத்தியங்களைக் கையாளலாம். அந்த வகையில் சளி மற்றும் இருமலைக் குணமாக்க கற்பூரவள்ளி உதவுகிறது. கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியதாகும். இதில் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட கற்பூரவள்ளி இலையை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Blocked Nose:மூக்கடைப்பா?… இந்த எளிய வீட்டு வைத்தியங்கள பாலோப் பண்ணுங்க!
கற்பூரவள்ளி இலைகள் பயன்படுத்தும் முறை
கற்பூரவள்ளி இலைகளை சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்ட பல்வேறு வழிகளைத் தேர்வு செய்யலாம்.
துளசி இலையுடன்
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச் சளி நீங்க கற்பூரவள்ளியை இந்த முறையில் உபயோகிக்கலாம். சிலர் அடிக்கடி மூச்சு விட சிரமப்படுபவர். இது ஆஸ்துமா காசநோயாகக் கூட மாறலாம். இதிலிருந்து விடுபட துளசி இலையையும், கற்பூரவள்ளி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பின் இதை லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் 5 மி.கி அளவு எடுத்துக் கொண்டால் மார்புச்சளியை குணமாக்கலாம்.
தேனுடன் கற்பூரவள்ளி சாறு
கற்பூரவள்ளி இலையில் இருந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். தேனில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. கற்பூரவள்ளி சாற்றுடன் தேன் கலந்து பயன்படுத்துவது சளி மற்றும் இருமலை நீக்க உதவுகிறது.
நல்லெண்ணெயுடன் கற்பூரவள்ளி சாறு
நல்லெண்ணெயுடன் கற்பூரவள்ளியைப் பயன்படுத்துவதன் மூலம் மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும், கற்பூரவள்ளி சாற்றுடன் 200 மி சம அளவிலான நல்லெண்ணெய் கலந்து காய்ச்ச வேண்டும். அதன் பிறகு இதனைத் தலையில் தேய்த்து வர சைனஸ், மூக்கில் நீர் வடிதல், தலைபாரம் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Best Home Remedies: வீட்டில் செய்யக் கூடிய கசாயங்களும், நன்மைகளும்
பனங்கற்கண்டு சேர்த்து
சிறு குழந்தைகள் அடிக்கடி சளி பிடிப்பது, இருமல் உண்டாவது பொதுவானதாகும். இது அவர்களின் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதே காரணமாகும். இதனால் பல்வேறு நோய்கள் உண்டாகலாம். கற்பூரவள்ளி இலையின் சாற்றை எடுத்து, அதில் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர இருமல் பிரச்சனையை நீக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத் தன்மையை நீக்க உதவுகிறது.
தூதுவளை, வல்லாரையுடன்
கற்பூரவள்ளி இலை, வல்லாரை, தூதுவளை போன்றவற்றை சம அளவில் எடுத்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, 100 மிலி தண்ணீர் சேர்த்து 50 மிலியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர நுரையீரல் பாதிப்பு நீங்கும். மேலும், இந்த சாற்றை அருந்துவது மூச்சுக்குழல் அடைப்பை சீராக்கும்.
இந்த வழிகளில் கற்பூரவள்ளி இலைகளைப் பயன்படுத்துவது பல்வேறு உடல் நல பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cough Home Remedies: நெஞ்சு சளியை கரைக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
Image Source: Freepik