$
Is Mint Leaves Good For Acne: கோடைக்காலம், குளிர்காலம் என எந்த காலங்களிலும் அனைவரும் சந்திக்கும் பொதுவான சரும பிரச்சனைகளில் முகப்பருவும் ஒன்று. இந்த சரும பிரச்சனைகளைப் போக்க உடலையும் நீரேற்றமாக வைக்க வேண்டும். இவ்வாறு கோடைக்கால சரும பிரச்சனைகளை நீக்க புதினா இலைகளைப் பயன்படுத்தலாம்.
புதினா இலைகளை சருமத்திற்குப் பயன்படுத்துவது முகப்பரு வடுக்களைக் குறைக்க உதவுகிறது. முகப்பரு வடுக்களை அகற்ற உதவும் சிறந்த காரணியாக புதினா இலை அமைகிறது. முகப்பரு வடுக்கள் நீங்க புதினா இலைகளைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Face: முல்தானி மிட்டியை இப்படி பயன்படுத்துனா இந்த சரும பிரச்சனைகளே வராதாம்
முகப்பரு வடுக்களைக் குறைக்க உதவும் புதினா இலை
முகப்பருக்களால் சருமத்திற்கு ஏற்படும் வடுக்களை நீக்க புதினா இலைகள் ஏன் உதவும் என்பது குறித்து காண்போம்.
ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த புதினா இலை
புதினாவில் கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பேட், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக்ஸ் போன்றவை நிறைந்துள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் காணப்படுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. புதினா இலைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து முகப்பருவிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

சாலிசிலிக் அமிலம் நிறைந்த புதினா இலை
சாலிசிலிக் அமிலமானது அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்பட்டு முகப்பரு மற்றும் வடுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது நெரிசலான நுண்ணறைகளை அவிழ்த்து முகப்பரு தழும்புகளைக் குறைக்க உதவுகிறது. இந்த இரசாயனம் பொதுவாக தோல் உரித்தல் மற்றும் முகப்பருவை சுத்தப்படுத்தும் பொருட்களில் காணப்படுகிறது. இவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தாது. இந்த சிறந்த முகவரானது புதினா இலையில் இருப்பதால், முகப்பரு பாதிப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Summer Face Pack: சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தைக் குளிர்ச்சியாக்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க
முகப்பரு தழும்பு நீங்க புதினா இலைகளைப் பயன்படுத்துவது எப்படி?
பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களுடன் புதினா இலைகளைச் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு தழும்புகளை நீக்கலாம்.
வெள்ளரி மற்றும் புதினா ஃபேஸ்பேக்
தேவையானவை
- புதினா இலைகள் - 10 -15
- வெள்ளரி - 1
செய்முறை
- வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இவை இரண்டையும் பேஸ்ட் செய்ய வேண்டும்.
- இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவி விடலாம்.

புதினா மற்றும் ஓட்ஸ் ஃபேஸ்பேக்
தேவையானவை
- புதினா இலைகள் - 10 -15
- வெள்ளரி கூழ் - 1 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
- ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை
- ஓட்ஸை அரைத்து வைத்து, புதினா இலைகளை நறுக்க வேண்டும்.
- கிண்ணம் ஒன்றில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து தேன், வெள்ளரிக்கூழ் சேர்த்து கலக்க வேண்டும்.
- இவை கெட்டியாக இருப்பின் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த கலவையை முகத்தில் தடவி பின் தண்ணீரைக் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dark Face Reason: உடலை விட முகம் கருமையாக இருப்பது ஏன்? காரணம், தீர்வு..
ரோஸ் வாட்டர் புதினா ஃபேஸ்பேக்
தேவையானவை
- புதினா இலைகள் - 5 -10
- ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி
- கடலை மாவு - சிறிதளவு
செய்முறை
- புதினா இலைகளை நசுக்கி, அதில் சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த கலவை தடிமனான நிலையை அடைய சிறிது கடலை மாவு சேர்க்க வேண்டும்.
- இதை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.

புதினா மற்றும் மஞ்சள் ஃபேஸ்பேக்
தேவையானவை
- புதினா இலைகள் - 10 -15
- மஞ்சள் - 1 சிட்டிகை
செய்முறை
- முதலில் புதினா இலைகளை அரைத்து சில துளிகள் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- இந்த கலவையில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் வைத்து பின் கழுவுவதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு புதினா இலைகளை மற்ற சரும பராமரிப்புப் பொருள்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள முகப்பரு வடுக்களை நீக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yogurt Face Pack: சருமத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சூப்பரான ஃபேஸ்பேக்!
Image Source: Freepik