$
Health Benefits Of Fresh Mint Leaves: நம் அன்றாட உணவில் நாம் சேர்க்கும் ஒவ்வொரு பொருள்களும் தனித்தனி ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும். அதன் படி, உணவுப்பொருள்களில் ஒன்றான புதினா ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய உணவுப்பொருளாகும். இதனை ஏன் நம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
புதினாவின் ஊட்டச்சத்துக்கள்
புதினா இலைகள் குறித்த நன்மைகளைத் தெரிந்து கொள்ளும் முன்பாக, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். புதினாவில் பைட்டோநியூட்ரியன்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர புதினாவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே பாக்டீரியாவுக்கு எதிரான குணங்களைக் கொண்டதாகும்.
மேலும் புதினாவில் அதிகளவிலான பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புதினாவில் குறைந்தளவிலான கலோரிகளே உள்ளது. கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க புதினா இலைகள் சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mint Leaves Benefits: நோயெதிர்ப்பு சக்தி முதல் மன அழுத்தம் வரை! புதினா இலை தரும் அற்புத நன்மைகள்
புதினா உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
குடல் எரிச்சலைப் போக்க
குடலில் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க புதினாவை உட்கொள்ளலாம். இந்த குடல் எரிச்சலானது செரிமான கோளாறு பிரச்சனையால் ஏற்படுகிறது. இது மலச்சிக்கல், வயிற்றில் வலி, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குடல் எரிச்சலுக்கு உணவுமுறை மாற்றங்கள் தீர்வாக அமையும் நிலையில், அதற்கு புதினா ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. புதினாவில் உள்ள மென்த்தால் ஆனது, தசைகள் மற்றும் செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.

செரிமான கோளாறு நீங்க
புதினா இலைகள் பசியை நன்றாக தூண்டக்கூடியதாகும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, உணவை செரிமானம் செய்யும் என்சைம்களை அதிகம் சுரக்கச் செய்கிறது. புதினா எண்ணெய் ஆனது ஆன்டி பாக்டீரியல் ஆற்றல் மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றுத் தொற்றுகளை சரி செய்யவும் உதவுகிறது. புதினாவில் உள்ள மெத்தனால் வலிப்பைக் குறைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க
வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வாய்க்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதாவும், துர்நாற்றத்தை நீக்குவதாகவும் புதினா அமைகிறது. புதினா உட்கொள்ளல் சுவாச ஆரோக்கியத்திற்கும், புத்துணர்வைத் தரக்கூடியதாகவும் அமைகிறது. இதில் உள்ள உட்பொருள்கள், பற்களில் தங்கி விடும் பிளேக்கை அகற்ற உதவுகிறது. இதனால், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் பேஸ்ட், சூயிங்கம்கள் மற்றும் மவுத் வாஷ்கள் போன்றவற்றில் புதினா பயன்படுத்தப்படுகிறது.
நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்க
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பாற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் தாவர வைட்டமின்கள், செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், புதினா இலைகள் சில எண்சைம்களை புகுத்தி, கட்டிகள் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mint Lemon Water Benefits: தினமும் புதினா எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மூளையின் ஆற்றலை மேம்படுத்த
புதினா இலைகள் மூளைக்கு சிறந்த டானிக்காக அமைகிறது. இதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகிறது. மூளையின் திறனை அதிகரிக்க, புதினா இலைகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். இது நினைவாற்றலை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது.

சுவாச பிரச்சனைகளை மேம்படுத்த
புதினா உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய நெரிசலைப் போக்கவும், இது அவர்களை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. தினமும் புதினா உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும். இது மூக்கடைப்பை சரி செய்ய உதவுகிறது. இதனால் சுவாசத்தை எளிதாக்கவும், நாள்பட்ட இருமல் மற்றும் எரிச்சலைப் போக்குகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
புதினா உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும், புதினாவின் நறுமணம் மனதை அமைதிப்படுத்துகிறது. எனவே புதினாவை தேநீரில் கலந்து கொள்ளலாம். இது மன அழுத்தத்தைப் போக்கி மன அமைதியை அதிகரிக்க புதினா கலந்த நீரில் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.
இது போன்ற ஏராளமான நன்மைகளைத் தரும் வகையில் புதினா அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pudina Water Benefits: புதினா வாட்டரில் இத்தனை நன்மைகள் இருக்கா? ஆனா இவங்க கட்டாயம் குடிக்கக் கூடாது
Image Source: Freepik