Pudina Water Benefits: புதினா வாட்டரில் இத்தனை நன்மைகள் இருக்கா? ஆனா இவங்க கட்டாயம் குடிக்கக் கூடாது

  • SHARE
  • FOLLOW
Pudina Water Benefits: புதினா வாட்டரில் இத்தனை நன்மைகள் இருக்கா? ஆனா இவங்க கட்டாயம் குடிக்கக் கூடாது


What Are The Benefits Of Mint Water: கோடை மாதங்களில் அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவே விரும்புவர். ஏனெனில் உடலில் ஏற்படும் நீரிழப்பானது பல்வேறு நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் தண்ணீரைத் தவிர, நீராதரங்களான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

புதினாவில் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவக் கூடியதாக அமைகிறது. மேலும் புதினா இலைகளை எடுத்துக் கொள்வது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. கோடைக்காலத்தில் புதினா நீரை உட்கொள்வது என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: High Protein Nuts: அதிக புரதம் நிறைந்த நட்ஸ் என்னென்ன தெரியுமா? இதை இப்படி தான் சாப்பிடணும்

புதினா நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கோடைக்காலத்தில் புதினா நீர் அருந்துவதால் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

பசியைக் கட்டுப்படுத்த

புதினா இலைகளில் சில ஆரோக்கியமான மற்றும் இயற்கையான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது வயிறு நிரம்பிய முழுமையான உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடை இழப்பை ஊக்குவிக்கலாம்.

நீரேற்றமாக வைக்க

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நீரேற்றமாக இருப்பது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக, புதினா நீரை அருந்தலாம். ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

நச்சுக்களை வெளியேற்ற

ஆரோக்கியமான உடல் எடை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிப்பதற்கு புதினா நீர் உதவுகிறது. இது உடலிலிருந்து நச்சுக்களை நீக்க அவசியமாகிறது. புதினா நீர் ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு, நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதன் மூலம் செரிமான அமைப்பை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Raw vegetable Benefits: பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

புதினா இலைகளை உட்கொள்வது செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவுகிறது. மேலும், உடலின் கலோரிகளை எரிக்கவும், பிடிவாதமான எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

மோசமான செரிமானம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தைக் குறைப்பதுடன், உடல் எடை இழப்பை மெதுவாக்குகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். புதினா இலைகளில் உள்ள மெந்தோல் ஆனது செரிமான அமைப்பில் இனிமையான விளைவைத் தருகிறது. இது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

புதினா நீரை யார் உட்கொள்ளக் கூடாது?

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) உள்ளவர்கள் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க புதினா பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புதினா நீரை உட்கொள்வது GERD-ன் அறிகுறிகளைத் தூண்டுவதாக அமைகிறது. மிளகுக்கீரை எண்ணெயை அதிகளவு எடுத்துக் கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். மேலும் மிளகுக்கீரை எண்ணெய் பயன்பாடு சருமத்தில் எரிச்சல் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே இதை முகத்தில் பயன்படுத்தக் கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: Dehydration Foods: கோடைக்காலத்தில் உடலில் நீரிழப்பைத் தவிர்க்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Skipping Dinner Benefits: இரவில் சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

Disclaimer