உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளில் புரதமும் ஒன்று. உடலில் புரதச்சத்து குறைபாட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் புரதம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டை நீக்கலாம். சில நட்ஸ் வகைகள் சுவையானதாக மட்டுமல்லாமல், புரதம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதில் அதிக புரதம் நிறைந்த நட்ஸ் வகைகள் மற்றும் அதை உணவில் சேர்ப்பதற்கான ஆரோக்கியமான வழிகள் குறித்து காணலாம்.
அதிக புரதம் நிறைந்த நட்ஸ் வகைகள்
பாதாம்
இது சுவையான நட்ஸ் வகையாக மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். அதன் படி, கால் கப் அளவிலான பாதாம், 7 கிராம் அளவிலான புரதத்தைத் தருகிறது. மேலும், இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதாம் பருப்பை அப்படியே பச்சையாக சாப்பிடலாம் அல்லது சாலட்கள், கிரீமி பாதாம் பால் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk Protein Powder Benefits: பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
முந்திரி
இதன் கிரீமி அமைப்பு பலரையும் கவர்வதுடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய நட்ஸ் வகையாகக் கருதப்படுகிறது. இதில் ஏராளமான புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் படி, 1/4 கப் அளவிலான முந்திரியில் 5 கிராம் புரதங்கள் நிறைந்துள்ளது. முந்திரியையும் அப்படியே நேரடியாக உட்கொள்ளலாம். மேலும் கிரீமினஸ் சேர்க்க முந்திரியைச் சேர்க்கலாம்.
வால்நட்ஸ்
இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகையாகும். இவை ஓரளவு புரதத்தையும் வழங்குகிறது. அதன் படி கால் கப் அளவிலான வால்நட்ஸ் பருப்பில் 5 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது. இந்த கூடுதல் நன்மைகளைத் தரும் வால்நட்ஸ் பருப்பை வேகவைத்த பொருள்களில் சேர்க்கலாம், ஓட்மீலில் சேர்க்கலாம் மற்றும் காலை நேரத்தில் சாப்பிடலாம்.
பிஸ்தா
பிஸ்தா பருப்பும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. கால் கப் அளவிலான பிஸ்தா பருப்பில் 6 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன், மனநிறைவை மேம்படுத்துகிறது. தயிருடன் சேர்த்து உண்ணலாம் அல்லது நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rich Protein Food: முட்டைக்கு இணையான அதிக ப்ரோட்டின்.. வெஜ் பிரியர்களே புகுந்து விளையாடுங்கள்!
வேர்க்கடலை
புரத உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, வேர்க்கடலை சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதன் படி, கால் கப் அளவிலான வேர்க்கடலையில் 9.5 கிராம் அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். வேர்க்கடலை உட்கொள்வது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது. இதை வறுத்த, உப்பு அல்லது கிரீம் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
புரதம் நிறைந்த நட்ஸ்களை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த அதிக புரதம் நிறைந்த நட்ஸ் வகைகளை உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
- உணவுக்கு இடையில் விரைவான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாக இந்த நட்ஸ் வகைகளைச் சேர்க்க வேண்டும்.
- காலை நேரத்தில் ஸ்மூத்தியில் ஒரு ஸ்பூன் நட்ஸ் பட்டர் அல்லது நட்ஸ் வகைகளைச் சேர்ப்பது புரத உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது.
- புரதம் நிறைந்த காலை உணவுக்காக, நறுக்கிய நட்ஸ்களை தயிரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
- நட்ஸ்களை ஊறவைத்து, அதை வடிகட்டி பின் சத்தான நட்ஸ் பாலை உருவாக்கி எடுத்துக் கொள்ளலாம்.
- சாலட் வகைகளில் சுவையான, க்ரெஞ்சியான மற்றும் புரதச் சேர்க்கைக்கு நறுக்கிய நட்ஸ்களைச் சேர்த்து சாப்பிடலாம்.
இவை அனைத்தும் அதிக புரதங்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் ஆகும். இதனை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Protein Intake: புரதத்தை பெற உணவில் இணைக்க வேண்டியவை இவையே…Rich Protein Food: முட்டைக்கு இணையான அதிக ப்ரோட்டின்.. வெஜ் பிரியர்களே புகுந்து விளையாடுங்கள்!
Image Source: Freepik