Dark Face Reason: சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முறையான கவனிப்பு என்பது மிக அவசியம். சருமத்தை கவனிக்கிறோம் என நினைத்து பலரும் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதிலும் பலருக்கு பலன் கிடைப்பதில்லை.
பொதுவாகவே சருமத்திற்கு இயற்கையான செயல்முறை தான் பெரிதளவு பயனுள்ளதாக இருக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செயற்கை முறையாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. இருந்தாலும் பலருக்கும் உடலின் நிறத்தை ஒப்பிடுகையில் முகத்தின் நிறம் மட்டும் கருமையாக இருக்கும். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் நிறத்தில் இருந்து முகம் நிறம் மாறுபட காரணம் என்ன?

சூரிய ஒளியில் அதிக நேரம் வெளியில் சுற்றுவது
வெயிலில் வெளியே செல்லும் போது நமது முகத்தில் அதிக சூரிய ஒளி படும். உடலின் மற்ற பாகங்கள் ஆடைகளால் மூடப்பட்டிருக்கும். அனைத்து சமயங்களில் முகத்தை மூடமுடியாது இது சாத்தியமில்லை.
இதன் காரணமாக தோலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்கிறது. மெலனின் உற்பத்தி அதிகரிப்பதால், அது முகத்தின் நிறத்தை கருமையாக்கத் தொடங்குகிறது. எனவே, அதிக நேரம் வெயிலில் சுற்றினால் முகம் மட்டும் கருமையாகும்.
வெவ்வேறு வண்ண செல்கள்
உடலில் இருப்பதை விட முகத்தில் வெவ்வேறு வண்ண செல்கள் உள்ளன. அவை மெலனினை உடலை விட விரைவாக உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நமது முகத்தின் தோலின் நிறம் விரைவாக மாறுகிறது. எனவே, எந்த ஒரு தோல் பராமரிப்புப் பொருளைப் பயன்படுத்தினாலும், அதன் விளைவு முதலில் முகத்தில் தெரியும்.
ஹார்மோன் மாற்றம்
முக நிற வேறுபாட்டிற்குப் பின்னால் சில ஹார்மோன் காரணங்கள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உடலில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவதால் நிறம் மாறத் தொடங்குகிறது. உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்றதாக இருந்தால் முகத்தின் நிறமும் மாறலாம்.
முகத்திற்கு தனி கவனிப்பு
நாம் வெளியே சென்று வந்தால் உடனடியாக முகத்தை மட்டும் கழுவுவது வழக்கம். அதேபோல் க்ரீம் உள்ளிட்டவைகளை முகத்திற்கு அப்ளை செய்வோம். இதுபோன்ற காரணங்களால் முகப்பரு, கரும்புள்ளிகள் ஏற்படும். அதேசமயம் முகம் மட்டும் வேறு நிறத்தில் மாறி மீண்டும் கருமையாகும். இதன் காரணமாகவும் முகம் நிறம் மாறுபடலாம்.
மருந்து பயன்பாடு
நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால், உங்கள் முகத்தின் நிறம் மாறுபடலாம். மருந்துகளின் விளைவு முதலில் முகத்தில் தெரியும். அதேசமயம் அதன் தாக்கம் நம் உடலின் தோலில் தெரிவதில்லை.
Image Source: FreePik