What is the benefit of ajwain leaves: இந்திய வீடுகளில் பெரும்பாலும் காணப்படும் மூலிகை செடிகளில் ஒன்று கற்பூரவள்ளி. இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது காரமான மற்றும் துவர்ப்பு சுவையை உடையதாக இருந்தாலும் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இந்த செடி வீட்டிற்கு அழகை சேர்ப்பதுடன் இதன் நறுமணம் பல பிரச்சினையை சரி செய்யும்.
என்னதான் இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நம்மில் பலருக்கு தெரிந்தாலும், இது குறித்த தெளிவான விழிப்புணர்வு நம்மில் பலருக்கு தெரியாது. குளிர்காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் 1 கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!
ஓமவல்லி இலையின் மருத்துவ குணங்கள்

வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்
குளிர்காலத்தில் நம்மில் பலர் அடிக்கடி வயிறு தொடர்பான பிரச்சினையை சிந்திப்போம். இதிலிருந்து விடுபட, கற்பூரவள்ளி இலையை சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும், இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைப்பதோடு, வலி அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். கற்பூரவள்ளி இலைகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த இலையை உணவுக்குப் பிறகு சாப்பிட்டாலும், நல்ல பலன் கிடைக்கும். இது உணவை ஜீரணிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Winter woes: குளிர்காலத்தில் எண்ணெய் பலகாரங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும்?
சளி மற்றும் இருமலை நீக்கும்

காலநிலை மாற்றத்தால் பல நேரங்களில் சளி பிடிக்கும். இந்நிலையில், நீங்கள் கற்பூரவள்ளி இலை சாற்றில் தேன் சேர்த்து குடிக்கலாம். இப்படி தொடர்ந்து குடித்து வர சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், இந்த சாறு பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய்களின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.
வாய் துர்நாற்றம் நீங்கும்
நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டால், கற்பூரவள்ளி இலையை சாப்பிடலாம். இது ஒரு சிறந்த மவுத் ப்ரெஷ்னர் ஆகும். தினமும் காலையில் ஒரு கற்பூரவள்ளி இலை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதை உணவுக்கு பின்னரும் சாப்பிடலாம்.
மாதவிடாய் வலியைக் குறைக்கும்

ஆயுர்வேதத்தின்படி, கற்பூரவள்ளி இலைகளை தொடர்ந்து உட்கொள்வது மாதவிடாய் வலியைப் போக்க உதவும். தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையை கொண்டு தயார் செய்யப்படும் டீயை குடித்து வந்தால், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்புகள் நீங்கும்.
இந்த பதிவும் உதவலாம் : கேரட்டின் முழு ஆரோக்கியத்தையும் பெற… இப்படி சாப்பிட்டு பாருங்க!
உடலை டீடாக்ஸ் செய்கிறது
கற்பூரவள்ளி இலையை உலர்த்தி, அதில் தேநீர் செய்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சு நீங்கும். இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானம். இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் நியாசின் போன்ற பண்புகள் உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக வைக்கும். ஒரு கப் தண்ணீரில் கற்பூரவள்ளி இலைகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
தசை வலியில் இருந்து நிவாரணம்

உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் தசை வலியிலிருந்து நிவாரணம் பெற கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தலாம். நீங்கள் நீண்ட நாட்களாக மூட்டு வழியால் அவதிப்பட்டு வந்தால் கற்பூரவள்ளி மிகவும் நல்லது.
இதற்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து அதில் கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீர் பாதியாக குறைந்ததும் அதை வடிகட்டி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Pic Courtesy: Freepik