How can i make my cheeks puffy: சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது. அழகாக இருக்க விரும்பியே, பலரும் தங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறார்கள். அதே சமயம், சிலர் தங்களது எடையை அதிகரிக்க விரும்புகிறார்கள். இதற்கு சிறந்த தேர்வாக உடற்பயிற்சி அமைகிறது. ஆனால் எடை அதிகரிப்பது, குறிப்பாக முகத்தில் கொழுப்பை அதிகரிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஏனெனில், குழிவான கன்னங்கள் உடலின் அழகைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடலின் தோற்றத்தையும் கெடுக்கக் கூடிய்தாக அமைகிறது.
பெரும்பாலான மக்கள் தங்கள் கன்னங்களை குண்டாக மாற்றுவதற்காக பல்வேறு வகையான ஊசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதற்கு மாற்றாக நாம் இயற்கை வைத்தியங்களைக் கையாள்வது மிகவும் நல்லது. அவ்வாறு தளர்வான முகத்தை நிரப்ப, ஆரோக்கியமான உணவு முறையுடன் சில குறிப்புகளைப் பயன்படுத்தலாம். இந்த குறிப்புகளின் உதவியுடன், முகத்தில் கொழுப்பு அதிகரித்து காணப்படுவதுடன் கன்னங்களும் வீங்கி காணப்படும். இதில் கன்னங்களை குண்டாக மாற்றுவதற்கு ஃபிட் கிளினிக்கின் உணவியல் நிபுணர் சுமன் அவர்கள் பரிந்துரைத்து குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தொளதொளவென உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன? நீர் எடை என்றால் என்ன?
கன்னங்கள் குண்டாக மாற்றுவதற்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
கற்றாழை
முகத்தைப் பொலிவாக மாற்றுவது மட்டுமல்லாமல், முகத்தை குண்டாக மாற்றுவதற்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், சுருக்கங்களின் அறிகுறிகளையும் குறைக்க உதவுகிறது. கற்றாழையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் சி, ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை சருமத்தை ஈரப்பதமாக்கி, முகத்தின் பருமனை அதிகரிக்கிறது. இதற்கு, இரவில் வட்ட இயக்கத்தில் கற்றாழை ஜெல்லை வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, காலையில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
முகப் பயிற்சிகள்
முகத்தை குண்டாக மாற்றுவதற்கென சில முகப்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளின் மூலம் முகம் பளபளப்பாக மாறுவதுடன், முகத் தசைகளையும் அதிகரிக்கிறது. கன்னங்களை குண்டாக மாற்றுவதற்கு வாயை மூடிக்கொண்டு, கன்னங்களை முடிந்தவரை காற்றால் நிரப்ப வேண்டும். இந்நிலையில், 45 வினாடிகள் இருந்துவிட்டு பின்னர் மெதுவாக காற்றை வெளியேற்றலாம். இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம், விரைவாக பலன்களைப் பெற முடியும்.
தேன் தடவுவது
முகத்தை குண்டாக மாற்றுவதற்கு தேனைப் பயன்படுத்தலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது சருமத்தை இறுக்கமாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு சருமத்தில் ஒரு மெல்லிய அடுக்கில் தேன் தடவி 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chubby Cheeks Tips: கொழு கொழு கன்னங்களை பெற இந்த 5 டிப்ஸை பின்பற்றுங்க!
ஆப்பிள்
உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் பழங்களில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது. முகக் கொழுப்பை அதிகரிக்க விரும்புபவர்கள் ஆப்பிள்களை தொடர்ந்து உட்கொள்ளலாம். ஆப்பிள் உட்கொள்வது சருமத்திற்கு தேவையான புரதங்களான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் சருமத்தை மென்மையாக்கலாம். மேலும் ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்துடன் முக கொழுப்பையும் மேம்படுத்துகின்றன.
கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் பயன்பாடு
சருமத்தை குண்டாக மாற்ற கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்குவதுடன், வீக்கத்தை நீக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு பாதி ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினைக் கலந்து, படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக கன்னங்களில் தடவிக் கொள்ளலாம். பிறகு காலையில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்வதன் மூலம், சருமம் குண்டாவும், கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும்.
முகத்தை குண்டாக மாற்ற விரும்புபவர்கள் இந்த குறிப்புகளைப் பயன்படுத்தலாம். எனினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள், மருத்துவரை அணுகிய பின்னரே இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Chubby Cheeks: கன்னம் ஒட்டிப்போய் இருக்கா.? கொழு கொழு கன்னம் பெற இதை செய்யவும்..
Image Source: Freepik