Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

  • SHARE
  • FOLLOW
Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!


ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் என்பதே அனைவரின் விருப்பமாகும். இதனால் பல வேதிப்பொருள்கள், இரசாயனம் கலந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சருமம் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத சருமப் பொலிவைப் பெறலாம். இதில், சருமப் பொலிவை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.

சரும பொலிவிற்கு இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

கீழ்க்காணும் சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் சரும பொலிவை மேம்படுத்தலாம்.

கற்றாழை பயன்படுத்துதல்

சரும பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கற்றாழை மிக முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையின் ஜெல்லை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கும் முன், கற்றாழை தடவிய பிறகு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலை எழுந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். கற்றாழையுடன் தயிர், வெள்ளரி, தேன் உள்ளிட்ட மற்ற பொருள்கள் சேர்த்து கற்றாழை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

ஈரப்பதமாக வைத்திருத்தல்

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும். அதே போல அசுத்தங்களை நீக்குவதற்கு லேசான மற்றும் மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. மேலும், இதன் மூலம் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். முக ஸ்க்ரப்பைப் பயன்படுத்தி இறந்த செல்களை வெளியேற்ற முடியும். ஃபேஸ் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவது, சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்ற உதவுகிறது.

அதிக தண்ணீர் குடித்தல்

அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம், முகத்தில் வறண்ட சருமத்தை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெற முடியும். இது முகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடலுக்கும் நன்மை தருவதாக அமைகிறது. அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி போன்றவை ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்ணுதல்

சில இயற்கையான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம் முகப்பொலிவை மேம்படுத்த முடியும். குறிப்பாக பீட்ரூட், கேரட் போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் முகம் பளபளப்பாக இருப்பதை உணரலாம். இவ்வாறு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் தோல் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இது முகப்பொலிவிற்கு மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

முகப்பொலிவிற்கான உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முகப் பொலிவிற்கும் உடற்பயிற்சி அல்லது யோகா முக்கிய பங்காற்றுகிறது. மிகக்குறைந்த வயதில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களுக்கு யோகா அல்லது உடற்பயிற்சி உதவுகிறது. இயற்கை முறையில் இந்த உடற்பயிற்சி அல்லது யோகா செய்வதன் மூலம், முகப் பொலிவை மேம்படுத்துவதுடன், நீண்ட கால பயனாகவும் இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

Image Source: Freepik

Read Next

Orange Face Pack: முகத்திற்கு ஆரஞ்சு தோல்களை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்