Winter hair mask: குளிர்காலத்தில் வறண்ட முடியை ஈரப்பதமாக்க இந்த ஹேர் மாஸ்க்குகளை ட்ரை பண்ணுங்க

Homemade winter hair masks: குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைக்க சில வழிகளைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஏனெனில், குளிர்காலத்தில் முடி சார்ந்த பிரச்சனைகள் எழலாம். இதில் குளிர்ந்த காலநிலையின் போது முடியை நீரேற்றமாக வைக்க உதவும் ஹேர் மாஸ்க்குகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Winter hair mask: குளிர்காலத்தில் வறண்ட முடியை ஈரப்பதமாக்க இந்த ஹேர் மாஸ்க்குகளை ட்ரை பண்ணுங்க

Homemade hair masks for dry hair in winter: குளிர்காலம் வந்துவிட்டாலே பலரும் பல தரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி சார்ந்த பிரச்சனைகளாக முடி உதிர்வு, வறண்ட முடி மற்றும் வேறு சில பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக குளிர்ந்த காலநிலையின் போது ஏற்படும் காலநிலை மாற்றங்களால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இது தவிர, ஹேர் கலரிங் மற்றும் ஸ்டைலிங் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல் போன்றவற்றால் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

இவை அனைத்துமே முடியின் ஈரப்பதத்தை இழக்கச் செய்கிறது. ஆனால், வழக்கமான கண்டிஷனர் தலைமுடியை பெரும்பாலும் ஈரப்பதமாக்க போதுமானதாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உயிரற்ற கூந்தலைப் புதுப்பிக்க ஒரு சிறந்த தீர்வாக வீட்டிலேயே உள்ள சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் வறண்ட கூந்தலைப் போக்க குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய சில ஹேர் மாஸ்க்குகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Honey And Banana Hair Mask: ஆரோக்கியமான கூந்தலுக்கு வாழைப்பழத்தையும் தேனையும் இப்படி முயற்சிக்கவும்.!

வறண்ட கூந்தலுக்கான குளிர்கால ஹேர் மாஸ்க்குகள்

வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

இந்த ஹேர்மாஸ்க் பயன்படுத்துவது முடியை ஈரப்பதமாகவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவுகிறது. இதற்கு ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளலாம். பின் இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் வைத்து பிறகு அதைக் கழுவி விடலாம்.

வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க்

ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளலாம். பின் அதில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்க வேண்டும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி ஷாம்பூ கொண்டு கழுவலாம்.

தேங்காய் எண்ணெய், அவகேடோ ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய, ஒரு அவகேடோவை மசித்துக் கொள்ளலாம். பின் இதில் ஒரு முட்டை, ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் போன்றவற்றைச் சேர்க்கலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும் இதை அரை மணி நேரம் வைத்து பிறகு சாதாரண நீரில் கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair: பொடுகுத் தொல்லை நீங்க நெல்லிக்காயுடன் இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க

முட்டை, ஆலிவ் எண்ணெய், தேன் ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க்கை தயார் செய்வதற்கு, முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும். பிறகு முட்டையில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு கப் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்த ஹேர் மாஸ்கை சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவலாம்.

தயிர் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்

முதலில் அரை கப் அளவிலான தயிர் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். பிறகு இந்த பொருள்களை நன்றாகக் கலந்து, முடி மற்றும் உச்சந்தலையின் மீது தடவி விடலாம். இதை 30 நிமிடங்கள் வைத்து பிறகு பிறகு கழுவி விடலாம்.

இந்த வகை ஹேர்மாஸ்க்குகளின் உதவியுடன் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, குளிர்ந்த காலநிலையில் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க இது போன்ற ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Conditioner: வறண்ட முடிக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனர் இதோ!

Image Source: Freepik

Read Next

Hair Growth Drinks: வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவும்.. சந்தேகமே வேண்டாம்.. முடி சூப்பரா வளரும்..

Disclaimer