Hair Growth: நீளமான மற்றும் கருமையான கூந்தலுக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Hair Growth: நீளமான மற்றும் கருமையான கூந்தலுக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது?


தலைமுடி பராமரிப்பில் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் ஒரு அற்புத மூலிகைகள் ஒன்று செம்பருத்தி. இயற்கையாகவே, தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் செம்பருத்தி, ஆயுர்வேதத்தில் தலைமுடி வளர்ச்சிக்கான அற்புதங்களில் ஒன்றாகும். தலைமுடி உதிர்தல், வறட்சி போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மூலிகை உதவுகிறது. இது தலைமுடி உதிர்வைக் குறைப்பதுடன், வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. இது போன்ற ஏராளமான பயன்கள் கொண்ட செம்பருத்தியை தலைமுடிக்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

தலைமுடிக்கு செம்பருத்தியை பயன்படுத்துவது எப்படி?

செம்பருத்தி பூக்கள் மட்டுமல்லாமல் அதன் இலைகளும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியதாக அமைகிறது. குறிப்பாக, செம்பருத்தி பூக்களின் வழவழப்புத் தன்மை தலைமுடிக்கு இயற்கையாகவே நல்ல கண்டிஷ்னராகச் செயல்படுகிறது. இப்போது தலைமுடிக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

செம்பருத்தி ஆயில்

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தலைமுடிக்கு புத்துணர்ச்சி தரவும் செம்பருத்தி கலந்த எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை முடியின் தண்டு வரை ஆழமாக ஊடுருவி, ஊட்டச்சத்தை அளிக்கிறது. இந்த ஆயில் கொண்டு மசாஜ் செய்யும் போது முட அடர்த்தியாகிறது.

தேவையானவை

தேங்காய் எண்ணெய் – 1 கப்
செம்பருத்தி இலைகள் – 8
செம்பருத்தி பூக்கள் - 8

தயாரிக்கும் முறை

  • செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை நன்கு விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.
  • பாத்திரம் ஒன்றில் ஒரு கப் அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக்கி, அதில் அரைத்த செம்பருத்தி விழுதைக் கலந்து இரண்டு நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.
  • பின் தீயை அணைத்து, எண்ணெயைக் குளிர்விக்க வேண்டும். எண்ணெய் ஆறிய பின் பாட்டில் ஒன்றில் சேகரித்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

செம்பருத்தி ஹேர் பேக்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு செம்பருத்தி ஹேர் பேக் பிரபலமான ஒன்றாகும். மேலும், இது முடி வளர்வதையும் ஊக்குவிக்கிறது.

தேவையானவை

செம்பருத்தி இலைகள் – 1 கொத்து
மோர் – ¼ கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

  • முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு செம்பருத்தி இலைகளையும், வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அதனை மோரில் கலக்க வேண்டும்.
  • இவற்றை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் வைக்க பின், ஷாம்பூ கொண்டு கழுவலாம்.

செம்பருத்தி மற்றும் ஆம்லா ஹேர் பேக்

இயற்கையாகவே ஆம்லா முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு உதவுகிறது. இது முடியை பலப்படுத்தி, கருமையான கூந்தலை தருகிறது.

தேவையானவை

நெல்லிக்காய் தூள் – 3 தேக்கரண்டி
நசுக்கிய செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள் – 3 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

  • நெல்லிக்காய் தூள் மற்றும் நசுக்கிய செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல உருவாக்க வேண்டும்.
  • பின், இந்த கலவையை உச்சந்தலையில் தடவலாம். 40 நிமிடங்களுக்குப் பின், லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!

செம்பருத்தி ஷாம்பூ

செம்பருத்தியைப் பயன்படுத்தி தலைமுடிக்கு ஷாம்பூ ஆக பயன்படுத்தலாம். மூலிகை மருந்தான செம்பருத்தியின் இலைகள் லேசான நுரையைத் தருகின்றன.

தேவையானவை

பல வண்ண மலர்கள் – 5
செம்பருத்தி இலைகள் – 15
கடலை மாவு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்

தயாரிக்கும் முறை

  • செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை ஒரு கப் தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்துக் குளிர்விக்கவும்.
  • இவை குளிர்ந்ததும் கடலை மாவு சேர்க்க வேண்டும்.
  • இந்த கலவையே ஷாம்பூவாக பயன்படுத்தப்படுகிறது.

வேப்ப இலைகளுடன் செம்பருத்தி

தலைமுடியில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேம்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றுடன் செம்பருத்தி சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முடி வலிமை அடைவதுடன் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தேவையானவை

செம்பருத்தி இலைகள் – 1 கைப்பிடி
வேப்ப இலைகள் – 10
தண்ணீர் – ¼ கப்

தயாரிக்கும் முறை

  • வேப்ப இலையை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், செம்பருத்தி இலைகளை வேப்பம் பூ கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • இதனை முடிக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் வைத்து பின், வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்