Hibiscus Powder: முகப்பொலிவுக்கும், முடி அடர்த்திக்கும் உதவும் செம்பருத்தி பவுடர்! எப்படி தயார் செய்யலாம்?

  • SHARE
  • FOLLOW
Hibiscus Powder: முகப்பொலிவுக்கும், முடி அடர்த்திக்கும் உதவும் செம்பருத்தி பவுடர்! எப்படி தயார் செய்யலாம்?

செம்பருத்திப் பூக்களை அழகு பராமரிப்பில் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். அதன் படி, செம்பருத்திப் பூக்களைக் கொண்டு பொடி தயார் செய்யலாம். செம்பருத்தித் தூளானது புதிய பூக்களை விட நீண்ட காலம் நீடிக்கும். இந்த பொடியானது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதில் செம்பருத்தியின் அளவு மிகக் குறைவாக இருக்கும். கூடுதலாக, இதில் இரசாயனங்கள் சேர்க்கப்படலாம். இவை உடலுக்குத் தீங்கு விளைவதாக அமைகிறது. இதனைத் தவிர்க்க, செம்பருத்தி பொடியை வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம். இதில் செம்பருத்தி பொடி தயார் செய்யும் முறை, முடி மற்றும் சருமத்திற்குப் பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Lips: கருப்பான உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

செம்பருத்தி பவுடர் தயார் செய்யும் முறை

தேவையானவை

  • செம்பருத்தி மலர்கள்
  • செம்பருத்தி இலைகள்

செம்பருத்தி பவுடர் தயாரிக்கும் முறை

  • செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளைக் கொண்டு செம்பருத்தி பவுடர் தயார் செய்யலாம்.
  • இதற்கு முதலில் செம்பருத்திப் பூக்களை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும்.
  • இதை உலர்த்துவதற்கு சூரிய ஒளியை 1 முதல் 2 நாள்கள் வரை வைக்கவும் அல்லது விசிறி காற்றில் ஒன்று முதல் இரண்டு நாள்கள் வைத்து உலர வைக்க வேண்டும்.
  • ஆனால், உலர்த்தும் போது அதில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
  • இதில் பூக்கள் நன்கு காய்ந்த பிறகு அதை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதே போல, அரைக்கும் போது மிக்ஸி முழுவதுமாக காய்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு பவுடரை அரைத்த பிறகு, அதை கண்ணாடி கொள்கலன் ஒன்றில் சேமிக்க முயற்சிக்க வேண்டும்.
  • இந்த செம்பருத்தி தூளை நீண்ட காலம் வைத்து பயன்படுத்தலாம்.
  • செம்பருத்திப் பூ பொடியைப் பயன்படுத்த விரும்பும் போது, உலர்ந்த கரண்டியால் பொடியை எடுத்து பயன்படுத்த வேண்டும்.
  • இதை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

தலைமுடிக்கு செம்பருத்தி பொடி பயன்படுத்துவது எப்படி?

செம்பருத்தி பூக்கள் பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. பொடுகு பிரச்சனையைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் செம்பருத்தி பூக்கள் சிறந்த தீர்வாக அமைகிறது.

  • இதற்கு முதலில் செம்பருத்தி பூ பொடியுடன் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கெட்டியான கலவை ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை முடியின் வேர்களில் தடவ வேண்டும்.
  • இதை தலைமுடியில் 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வைக்க வேண்டும். பிறகு, முடியை சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு செம்பருத்தி பூபொடியை 15 நாள்களுக்கு ஒரு முறை தலைமுடியில் தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Nail Care: கோடைக் காலத்திலும் நகங்களைப் பராமரிக்கணும். எப்படி தெரியணுமா?

சருமத்திற்கு செம்பருத்தி பொடி பயன்படுத்துவது எப்படி?

வறண்ட சருமம், சரும எரிச்சல் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பொடி உதவுகிறது.

  • இதற்கு சருமத்திற்கு செம்பருத்தி பொடியை பயன்படுத்த, இரண்டு ஸ்பூன் அளவு தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் செம்பருத்தி பொடி கலவையை தயார் செய்ய வேண்டும்.
  • இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, பேக்கை முகத்தில் 15 நிமிடம் வைக்க வேண்டும்.
  • பிறகு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
  • செம்பருத்தி பூ பொடி மற்றும் தயிர் இரண்டும் முகத்தை ஈரப்பதமாக வைக்கவும், முகத்தைப் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
  • இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
  • ஆனால், இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு முன்னதாக, பேட்ச் டெஸ்ட் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செம்பருத்தி பொடி டீ தயார் செய்வது எப்படி?

  • செம்பருத்தி பவுடரிலிருந்து தேநீர் தயார் செய்யலாம்.
  • இதற்கு முதலில் ஒன்றரை கப் அளவிலான தண்ணீரைக் கொதிக்க வேண்டும்.
  • இந்த தண்ணீர் நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் செம்பருத்தி பூ பவுடர் சேர்க்கலாம்.
  • இந்த இரண்டையும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • இப்போது செம்பருத்தி டீ தயாராகி விட்டது.
  • இதில் சுவைக்கேற்ப தேன் அல்லது பேரீச்சம்பழம் சேர்த்து குடிக்கலாம்.
  • இந்த செம்பருத்தி தேநீர் சுவையுடன் கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

செம்பருத்தி பூக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலே கூறப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, ஃபேஸ் பேக், ஹேர் பேக் அல்லது தேநீராகவோ பயன்படுத்தலாம். இது உடலில் உள்ள இரத்த சோகை பிரச்சனையை நீக்கி, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Kajal Benefits: அழகான, கவர்ச்சியான கண்களுக்கு வீட்டிலேயே காஜலை இப்படி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Rosewater Benefits: சருமம், முடிக்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள்! எப்படி பயன்படுத்துவது?

Disclaimer