How To Use Rose Water To Benefit Your Skin And Hair: இன்று பலரும் ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ரோஸ் வாட்டர் ஆனது தண்ணீரில் காய்ச்சிய ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது அழகு நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ரோஸ் வாட்டரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வைத் தருகிறது.
ஆனால், பளபளப்பான சருமம் மற்றும் கூந்தலுக்கும் ரோஸ் வாட்டர் மிகுந்த நன்மை பயக்கிறது. ரோஸ் வாட்டரில் உள்ள பல்வேறு பண்புகள் சருமம், கூந்தல் இரண்டிற்குமே கூடுதல் நன்மைகளைத் தரும் ஒன்றாக அமைகிறது. இதில் சருமம் மற்றும் முடிக்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Summer Nail Care: கோடைக் காலத்திலும் நகங்களைப் பராமரிக்கணும். எப்படி தெரியணுமா?
கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள்
பொடுகைக் குறைக்க
ரோஸ் வாட்டரில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையின் அரிப்பை அகற்றி, பொடுகைக் குறைக்க உதவுகிறது.
எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த
ரோஸ் வாட்டர் pH -ஐ சமநிலைப்படுத்துவது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இது உலர்ந்த உச்சந்தலை மற்றும் எண்ணெய் முடிக்கு ஏற்றதாக அமைகிறது.
இயற்கையான நறுமணத்திற்கு
ரோஸ் வாட்டர் செயற்கை வாசனை திரவியங்கள் போல் இல்லாமல், ரோஸ் வாட்டர் கூந்தலில் ஒரு இனிமையான மற்றும் இயற்கையான வாசனையைத் தருகிறது.
நீரேற்றமாக வைக்க
ரோஸ் வாட்டரைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடியின் ஆழமாக நிலைநிறுத்தி, ஈரப்பதமாகவும், மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.
முடி வேர்களை வலுப்படுத்த
ரோஸ் வாட்டரில் உள்ள பண்புகள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது எப்படி?
கண்டிஷனராக
ரோஸ் வாட்டரை கிளிசருடன் சேர்த்து, கண்டிஷனராகப் பயன்படுத்தலாம். இது தலைமுடிக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், முடி பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே
ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, அவ்வப்போது தலைமுடிக்கு பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது.
நேரடியாக
உச்சந்தலையில் ரோஸ் வாட்டரை நேரடியாகத் தடவி மசாஜ் செய்யலாம். இது முடியில் காணப்படும் பொடுகைக் குறைக்க மற்றும் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Facial Hair Growth Remedies: முகத்தில் அங்கங்க முடியா இருக்கா? இந்த பேக் யூஸ் பண்ணுங்க
முடியை அலசுவது
தலைமுடிக்ஷாகு ம்பு மற்றும் கண்டிஷனிங் பயன்படுத்திய பின், ரோஸ் வாட்டரை இறுதியாகப் பயன்படுத்தலாம். இது தலைமுடிக்கு மென்மையையும், புதிய வாசனையைத் தருவதாகவும் அமைகிறது.
சருமத்திற்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள்
செல் சேதத்திலிருந்து பாதுகாக்க
ரோஸ் வாட்டரில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், சருமத்திற்கான ரோஸ் வாட்டர் பயன்பாடு முதுமை செயல்முறையை மெதுவாக்கவும், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.
நீரேற்றமிக்க
ரோஸ் வாட்டர் ஒரு இயற்கையான மற்றும் அற்புதமிக்க இயற்கையான ஹைட்ரேட்டராக செயல்படுகிறது. இது சருமத்தின் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது.
எரிச்சலூட்டும் சருமத்திற்கு
ரோஸ் வாட்டரில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பரு, தோலழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் சிவத்தல் போன்றவற்றைத் திறம்பட குறைக்கிறது
தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க
ரோஸ் வாட்டரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும், தொற்றுநோய்களிலிருந்து விடுபட வைக்கவும், காயத்தைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
முகப்பரு வெடிப்பைக் குறைக்க
சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்துவது அவசியமாகும். ஏனெனில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியால் முகப்பரு வெடிப்பு ஏற்படலாம். இதற்கு ரோஸ் வாட்டர் மிகவும் சிறந்த தீர்வாகும். ரோஸ் வாட்டர் pH அளவை சமநிலைப்படுத்தி, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து முகப்பரு வெடிப்பைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Home Made Skin Toner: அழகான, மென்மையான சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஸ்கின் டோனரை செய்யுங்க
சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது எப்படி?
ரோஸ் வாட்டரை நேரடியாக
ரோஸ் வாட்டரை முகப்பரு உள்ள பகுதிகளில் தடவுவதன் மூலம் ரோஸ் வாட்டரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பருக்கள் மற்றும் வெடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.
ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்
தேன், தயிர் போன்ற இயற்கை சரும பராமரிப்புப் பொருள்களுடன் ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர் டோனர்
சருமத்திற்கு ரோஸ் வாட்டரை டோனராக பயன்படுத்துவது சருமத்தின் துளைகளை இறுக்கவும், சருமத்தை தொனிக்கவும் உதவுகிறது. ரோஸ் வாட்டரை மாய்ஸ்சரைசர்கள் அல்லது சீரம்களுக்கு தயார் செய்து காட்டன் பேட் மூலம் பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே
சருமத்தைப் புத்துணர்ச்சியாக்க ரோஸ் வாட்டரை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது
மேக்கப் ரிமூவராக
சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து சருமத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவுகிறது. எனவே இதனை பயனுள்ள மற்றும் மென்மையான மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் இயற்கையான மற்றும் மென்மையான பண்புகள் சருமம், முடி வகைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இவ்வாறு ரோஸ் வாட்டர் ஒரு பல்துறை மற்றும் பயனுள்ள அழகுப் பொருளாகப் பயன்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Kajal Benefits: அழகான, கவர்ச்சியான கண்களுக்கு வீட்டிலேயே காஜலை இப்படி செய்யுங்க
Image Source: Freepik