Expert

Rose Water For Hair: காடு மாறி முடி வளர ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Rose Water For Hair: காடு மாறி முடி வளர ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

இதனைத் தவிர்க்கவும், முடி ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் பராமரிக்கவும் வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். அந்த வகையில் முடி ஆரோக்கியத்திற்கு ரோஸ் வாட்டர் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ரோஜா ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அதாவது சருமம் மற்றும் கூந்தலின் அழகை அதிகரிக்க பலரும் ரோஸ் வாட்டரை பயன்படுத்துகின்றனர். ரோஸ் வாட்டர் எவ்வாறு கூந்தலுக்கு உதவுகிறது என்பது பற்றியும், முடி வளர்ச்சிக்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Garlic Oil for Hair: புல்லட் வேகத்தில் முடி வளர பூண்டு எண்ணெயை இப்படி வீட்டிலேயே தயார் செய்யுங்க!

கூந்தலுக்கு ரோஸ் வாட்டர்

உண்மையில் ரோஸ் வாட்டரில் வைட்டமின் ஏ, பி3, சி மற்றும் ஈ போன்றவை காணப்படுகிறது. மேலும் இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். மேலும், இவை கூந்தலின் பொலிவை அதிகரிக்கவும், கூந்தலை மென்மையாக்கவும் உதவுகிறது. இவ்வாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது. தலைமுடி அழகை அதிகரிக்க, ரோஸ் வாட்டரை முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்தலாம். இதற்கு ரோஸ் வாட்டரால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இதில் ரோஸ் வாட்டரை தலைமுடிக்கு பயன்படுத்த உதவும் பல்வேறு வழிகள் குறித்து மேக்ஓவரின் அழகு நிபுணரான பூஜா கோயல் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தலைமுடிக்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் முறை

ரோஸ்வாட்டர் ஷாம்பு (Homemade Rose Water Shampoo)

தலைமுடிக்கு ரோஸ் வாட்டரை ஷாம்புவாகவும் பயன்படுத்தலாம். இதற்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஷாம்பூ தயாரிக்க முடியும். இந்த ரோஸ்வாட்டர் ஷாம்பு தயார் செய்வதற்கு முதலில் அரை கப் அளவிலான ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளலாம். பின் அதில் ரோஸ் ஆயில், பீர் மற்றும் 2 ஸ்பூன் அளவிலான காஸ்டில் சோப் போன்றவற்றைச் சேர்க்கவும். இதை அனைத்தும் நன்றாக கலக்கும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும். இப்போது வீட்டிலேயே ரோஸ் வாட்டர் ஷாம்பு தயாரானது. இந்த ஷாம்புவின் உதவியுடன், தலைமுடியைக் கழுவ வேண்டும். இது முடிக்கு ஊட்டமளித்து, உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. இதனுடன், கூடுதலாக தலைமுடியில் படிந்துள்ள அழுக்கு, தூசி போன்றவற்றை நீக்கலாம். மேலும் இது கூந்தலின் அழகை அதிகரிக்கும்.

ஷாம்பு கலந்து தடவுவது (Rose Water Mix With Shampoo)

ரோஸ் வாட்டரை வழக்கமான ஷாம்பூ கலந்து பயன்படுத்தலாம். இதற்கு முதலில் 3-4 ஸ்பூன் அளவிலான ஷாம்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சம அளவிலான ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும். இப்போது இந்தக் கலவையை தலைமுடியில் தடவி, பிறகு சாதாரண நீரில் முடியை கழுவி விடலாம். இவ்வாறு தடவுவது தலைமுடியை மென்மையாகவும் வலுவாகவும் மாற்றுகிறது. இது முடியின் ஆழமான சீரமைப்புக்கு வழிவகுக்கிறது. இவை கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Protein Rich Foods: கூந்தல் டிரிபிள் மடங்காக வேகமா வளர இந்த புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடுங்க

ரோஸ்வாட்டர் க்ளீன்சர் (Rose Water Cleanser)

கூந்தலுக்கு ரோஸ் வாட்டரை சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம். அதாவது ரோஸ் தண்ணீரைக் கொண்டு தலைமுடியை அலசுவதாகும். இதற்கு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ரோஸ் வாட்டரைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதைப் பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி விடலாம். இதன் மூலம் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை நீக்க முடியும். மேலும், இவை முடியின் மயிர்க்கால்களை வலுவடையச் செய்வதுடன், கூந்தலின் பொலிவை அதிகரிக்கிறது.

ரோஸ் வாட்டர் ஹேர்மாஸ்க் (Rose Water Hair Mask)

ஹேர் மாஸ்க்காக தயார் செய்து ரோஸ் வாட்டரை தலைமுடியில் தடவலாம். வீட்டிலேயே ரோஸ் வாட்டரைக் கொண்டு டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்கைத் தயார் செய்யலாம். இதற்கு பாத்திரம் ஒன்றில் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ளலாம். பின் அதில் தேங்காய் எண்ணெய், ரோஸ் ஆயில் போன்றவற்றைச் சேர்க்கலாம். இதை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு ரோஸ் வாட்டர் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தும் போது முடியை ஆழமாக நிலைப்படுத்துகிறது. மேலும், முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

ரோஸ் வாட்டரைக் கூந்தலில் எப்படி பயன்படுத்தலாம்?

ரோஸ் வாட்டரை ஷாம்பு, ஹேர் மாஸ்க், க்ளீன்சர் போன்ற பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இது தவிர, இன்னும் பல்வேறு வழிகளிலும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். மேலும் ஜோஜோபா எண்ணெய் , வைட்டமின் ஈ போன்றவற்றை ரோஸ் வாட்டரில் கலந்து தடவலாம். இவ்வாறு கோடையில் ரோஸ் வாட்டரைக் கூந்தலில் தடவுவது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில், இவை கூந்தலுக்கு குளிர்ச்சியையும் வழங்கவும், அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் வியர்வை போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தரவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Clips: முடிக்கு கிளிப் யூஸ் பண்ணுவது நல்லதா? எந்த கிளிப் யூஸ் பண்ணலாம்?

Image Source: Freepik

Read Next

Hair Loss: என்ன செய்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்போ இதை செய்யுங்க!!

Disclaimer

குறிச்சொற்கள்