How to make rosemary water for hair growth: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாகபலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இது ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் அல்லது சில மருந்துகள் காரணமாகவும் ஏற்படுகிறது. இதனால், முடி வறட்சி, முடி உடைதல், முடி உதிர்வு மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழலாம். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பலரும் இரசாயனங்கள் கலந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இது சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதைத் தவிர்க்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் இயற்கையான முறைகளைக் கையாள்வது நல்லது. அவ்வாறு முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ரோஸ்மேரி ஒரு சிறந்த வழியாகும். ரோஸ்மேரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இது முடிவளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. ரோஸ்மேரி இலை கொண்டு தயார் செய்யப்படும் ரோஸ்மேரி வாட்டர் உண்மையில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் முடி ஆரோக்கியத்திற்கு ரோஸ்மேரி வாட்டர் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rosemary Tea for Hair: அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் வேணுமா? இந்த டீ ஒன்னு போதும்!
முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி வாட்டர் தரும் நன்மைகள்
ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் ஊறவைத்து ரோஸ்மேரி வாட்டர் தயாரிக்கப்படுகிறது. இது முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. இதில் தலைமுடிக்கு ரோஸ்மேரி வாட்டர் தரும் நன்மைகளைக் காணலாம்.
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு
ரோஸ்மேரி நீர் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகும். இது பொடுகு மற்றும் அரிப்பு உச்சந்தலை பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக அமைகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உச்சந்தலை தொற்றுக்களைக் குறைக்க ரோஸ்மேரி வாட்டர் சுத்தமான மற்றும் நன்கு ஊட்டமளிக்கும் இயற்கையான தீர்வாக அமைகிறது. இது மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு உச்சந்தலையைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சிக்கான சூழலை ஊக்குவிக்கிறது. ஆய்வில் மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் மயிர்க்கால்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வழங்குவதை உறுதி செய்கிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
ரோஸ்மேரியில் ரோஸ்மரினிக் அமிலம் நிறைந்துள்ளது. ஆய்வின் படி, ரோஸ்மேரி மூலிகையில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காணப்படுகிறது. இவை அனைத்தும் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியதாகும்.
முடி தோற்றத்தை மேம்படுத்துவதற்கு
ரோஸ் வாட்டரில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆய்வில், ரோஸ்மேரி சாற்றில் ஃபிளாவோன்கள், ஃபிளவனோல்கள் மற்றும் ஃபிளவனோன்கள் உட்பட 24 ஃபிளாவனாய்டுகள் மற்றும் 5 பீனாலிக் அமிலங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது முடியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை மேம்படுத்துகிறது. ரோஸ்மேரி நீர் உச்சந்தலையில் இயற்கை எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தலைமுடியை பளபளப்பாக மாற்றுகிறது. குறிப்பாக, ஷாம்பூ பயன்படுத்திய பிறகு, இறுதியாக இந்த நீரைப் பயன்படுத்துவது, முடிக்கு மிருதுவான மற்றும் பட்டு போன்ற தோற்றத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Rosemary for Hair: தலைமுடி நீளமாக, அடர்த்தியாக வளர… இந்த 3 ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க!
முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி வாட்டர் தயாரிக்கும் முறை
தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ரோஸ்மேரி வாட்டரை வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம்.
- முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு, இந்த கொதிக்கும் நீரில் ஒரு சில உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை சேர்க்க வேண்டும்.
- இதை குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து தனியே வைக்கலாம்.
- இப்போது, இந்த ரோஸ்மேரியை ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.
- 4 க்கு 1 என்ற விகிதத்தில் ரோஸ்மேரி தண்ணீரை காய்ச்சி வடிகட்டிய நீரில் நீர்த்துப்போகச் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு முடியைக் கழுவ பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தண்ணீர் பயன்படுத்தும் முறை
ரோஸ்மேரி தண்ணீரை முடி வளர்ச்சிக்குப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
- ரோஸ்மேரி தண்ணீரை எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலையில் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலையின் தசை தளர்வு மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. மேலும், இது மிகவும் தளர்வாக உணர வைக்கிறது.
- ரோஸ்மேரி நீரை ஒருவர் விரும்பும் ஷாம்பூவில் கலந்து, தலைமுடியைக் கழுவும்போது பயன்படுத்தலாம்.
- தலைமுடி வறட்சியடையாமல் போக, ஊட்டமளிக்க விரும்பினால், ரோஸ்மேரி நீரில் ஆமணக்கு எண்ணெயைச் சேர்த்து தலைமுடியில் தடவலாம்.
- ரோஸ்மேரி தண்ணீரில் முடி வளர்ச்சிக்கு உதவும் புதிய கற்றாழை ஜெல்லை சேர்க்கலாம். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடி முழுவதும் தடவி, அதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான முறையில் முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தண்ணீரை பயன்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Rosemary Benefits: முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இதை செய்யுங்கள்!
Image Source: Freepik